சேவையை பிரதானப்படுத்திய பொது வாழ்க்கை: சென்னை, 'மாஜி' மேயர் சைதை துரைசாமி பேட்டி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

07 ஜூன்
2020
08:10
பதிவு செய்த நாள்
ஜூன் 06,2020 23:42

சென்னை; ''எம்.ஜி.ஆர்., கூறியதை ஏற்று, சேவையை பிரதானப்படுத்திய, பொது வாழ்க்கையை கடைப்பிடித்து வருகிறேன்,'' என, பிரபல, 'போர்ப்ஸ் இந்தியா' இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், சென்னை மாநகர முன்னாள் மேயர், சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.பிரபல, 'போர்ப்ஸ் இந்தியா' இணையதளம், இந்திய அளவில், கல்வி சேவை செய்யும், 40 பேரை தேர்வு செய்துள்ளது. அதில், சென்னை மாநகர முன்னாள் மேயரும், மனிதநேயம் அறக்கட்டளை நிறுவனருமான, சைதை துரைசாமி, முதலாவதாக தேர்வாகி உள்ளார்.'இலவசமாக கொடுப்பேன்'
அந்த இணையதளத்திற்கு, அவர் அளித்த பேட்டி:நான் கிராமத்தில் இருந்து வந்து, நகர்புறத்தில் தொழில் துவங்கி, அரசியல், வணிகம் இரண்டையும் இணைத்து நடத்தினேன். துவக்க காலம் முதல், இந்த சேவையை பிரதானப்படுத்துவதற்கு, என் அம்மா, என் தலைவர் எம்.ஜி.ஆர்., ஆகியோரே காரணம். 'சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும்' என, எம்.ஜி.ஆர்., என்னிடம், 1973ல் கூறினார். அதை ஏற்று, சேவையை பிரதானப்படுத்திய ஒரு பொது வாழ்க்கையை, இதுவரை, நான் கடைபிடித்து வருகிறேன்.நான் சம்பாதித்தது மக்களுக்காக என்ற, எண்ணத்துடன் செயல்பட்டு வருகிறேன். 'ஓடி ஓடி உழைக்க வேண்டும்; ஊருக்கெல்லாம் கொடுக்க வேண்டும்' என்ற, எம்.ஜி.ஆர்., படப்பாடல் அடிப்படையில், மனித நேயம் அறக்கட்டளை துவக்கப்பட்டது.முதன் முதலாக, பொறியியல் கல்லுாரி துவங்கிய காலத்தில், ஆர்.எம்.வீரப்பன் என்னை, பொறியியல் கல்லுாரி ஆரம்பிக்கும்படி கூறினார்; நான் மறுத்து விட்டேன். 'கல்வியை காசாக்க கூடாது. என்னிடம் பொருளாதார வசதி இருந்தால், கல்வியை இலவசமாக கொடுப்பேன்' என்று, 1983ல் கூறினேன்.உயர் பதவி
நல்ல அரசியல்வாதிகளும், நல்ல அதிகாரிகளும் சேர்ந்து பணியாற்றினால், ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும் என்ற அடிப்படையில், நல்ல அரசியல்வாதியாக, என்னை வடிவமைத்து, அதன் பாதையில், செயல்பட்டு கொண்டிருக்கிறேன். உயர் பதவியில் இருக்கிற அதிகாரிகள், நேர்மையானவர்களாக, சேவை மனப்பான்மை உள்ளவர்களாக, லஞ்ச லாவண்யங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக இருந்தால், இந்த ஜனநாயக கட்டமைப்பு சரியாக இருக்கும். அதற்காக, 2005ல் மனிதநேய அறக்கட்டளை துவக்கப்பட்டது.நுாறு பேருடன் துவக்கப்பட்ட, மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., இலவச கல்வி அறக்கட்டளை, இன்றைக்கு, 18 ஆயிரம் பேர் வரை, இலவசமாக பயிற்சி அளிக்கும் பணியை செய்து வருகிறது.மிகவும் பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் பின் தங்கிய, ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளை, உயர் பதவியில் அமர்த்தி உள்ளோம். டீக்கடை உரிமையாளர் மகன், உணவகங்களில் வேலை செய்வோர் மகன் போன்றோரை, ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற வைத்துள்ளோம்.' தடை அதை உடை '
தகுதி, திறமை இருந்தும், பொருளாதாரம் ஒன்றுதான் தடை என்றிருப்போருக்கு, அந்த தடையை தகர்த்து, அவர்கள் தகுதிக்கு அங்கீகாரத்தை கொடுத்துள்ளோம். அவர்கள் நேர்மையானவர்களாகவும், துாய்மையானவர்களாகவும், தேசப்பற்று உள்ளவர்களாகவும், மக்களுக்கு சேவை செய்வர். இது, ஒரு மகிழ்ச்சிகரமான பணி. சேவை என்பது மன நிறைவு. இந்த நாட்டிற்காக, நல்ல சிந்தனை, நல்ல பண்புகளை உடைய, இளைஞனை தயார் செய்து, நாட்டின் நான்கு துாண்களில், ஒரு துாணாக நிற்க வைத்து...அந்த இளைஞன் மிகப்பெரிய பதவியில் அமர்ந்து விட்டு, என்னை வந்து பார்க்கிறபோது, எனக்கு மன நிறைவு ஏற்படுகிறது. இவ்வாறு, சைதை துரைசாமி கூறினார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandramoulli - Mumbai,இந்தியா
07-ஜூன்-202017:07:01 IST Report Abuse
Chandramoulli Saidai Duraisamy did a marvelous job. Hats off to his thinking and maintain the same .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X