கோவை வந்த 6 பேருக்கு கொரோனா! நாளுக்கு நாள் அதிகரிக்கும் தொற்று | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
கோவை வந்த 6 பேருக்கு கொரோனா! நாளுக்கு நாள் அதிகரிக்கும் தொற்று
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2020
00:03

கோவை:ஊரடங்கு தளர்வுக்குப் பின் கோவையில் நாளுக்கு நாள், 'கொரோனா' தொற்று அதிகரித்து வருகிறது. வெளியூர்களில் இருந்து வந்த, ஆறு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது, நேற்று உறுதி செய்யப்பட்டது.கோவை மாவட்டம், கணுவாய் பகுதியை சேர்ந்த, 29 வயது இளைஞர், மகாராஷ்டிராவில் இருந்து சாலை வழியாக கோவை வந்தார். சளி, காய்ச்சல் இருந்ததை அடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்துள்ளார்.


அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.அவரை மகாராஷ்டிராவில் இருந்து அழைத்து வந்த கார் டிரைவர், ஈரோடுமாவட்டம் தாளவாடி பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவரையும், பரிசோதிக்க சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல், மகாராஷ்டிராவில் இருந்து நேற்று முன்தினம், 48 வயது பெண், சிகிச்சைக்காக, கணவன், மகளுடன் ஆம்புலன்சில் கோவை வந்தார். இருவருக்கும் கொரானோ தொற்று உள்ளது.கோவை எஸ்.என்.பாளையத்தை சேர்ந்த, 27 வயது இளைஞர், சென்னையில் இருந்து வந்த, 48 மற்றும் 50 வயது சகோதரர்கள் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பதும் நேற்று உறுதி செய்யப்பட்டது.வீரியம் அதிகரிப்புகலெக்டர் ராஜாமணி கூறியதாவது:கோவையில் கொரோனா வைரஸ் வீரியம், முன்பு இருந்ததை காட்டிலும் அதிகரித்து இருக்கிறது. சிகிச்சை பெறும், 29 பேரில் மூன்று பேருக்கு ஆக்ஸிஜன் தேவை ஏற்பட்டுள்ளது.ஏப்., 25 முதல் டில்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, 54 விமானங்கள் கோவை வந்துள்ளன. இதில், 43 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.


பல்வேறு வழிகளில், கோவை வந்து தொற்று உறுதி செய்யப்பட்ட, 29 பேர், தற்போது இ.எஸ்.ஐ., மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், நான்கு பேர் மட்டுமே கோவையை சேர்ந்தவர்கள்.தொற்று உறுதி செய்யப்பட்ட பிற மாவட்டத்தினர், அவரவர் மாவட்டங்களுக்கு அனுப்பி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.இதுவரை, 20 ஆயிரத்து 401 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, 158 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.


நேற்று ஒரு நாள் மட்டும், 986 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 55 ஆயிரம் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.


முக கவசம் அணியாவிட்டால் ரூ. 100 அபராதம்


கலெக்டர் ராஜாமணி கூறுகையில், '' வரும், 8ம் தேதி முதல் (நாளை) முககவசம் இன்றி, வீட்டில் இருந்து வெளிவருபவர்களுக்கு, 100 ரூபாய் அபராதம், மாவட்டம் முழுவதும் வசூலிக்கப்படும். பிற மாநில, மாவட்டங்களில் இருந்து வந்து, தனிமைப்படுத்திக்கொள்ளாமல் வெளியில் வரும் நபர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது, 4,000 பேர் கோவையில் வீடுகளிலும், மையங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X