| அரிய நோயால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு சிகிச்சை Dinamalar
அரிய நோயால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு சிகிச்சை
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2020
00:04

கோவை:அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு, கோவை அரசு மருத்துவமனையில், வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.கோவை, சூலுாரை சேர்ந்த தம்பதிக்கு, மூன்று வாரங்களக்கு முன் தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு, ரத்த சோகை, மஞ்சள் காமாலை போன்ற பாதிப்பு இருந்ததால், உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.


குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு, டாக்டர்கள் சசிக்குமார் தலைமையிலான மருத்துவர் குழு பரிசோதனை செய்தனர். அதில், குழந்தைக்கு, 'இம்யூனோ குளோபலின்' என்ற மருந்தால் சிகிச்சை அளிக்கப்பட்டது.டாக்டர் சசிக்குமார் கூறுகையில்,''பொதுவாக பிறந்த குழந்தைகளுக்கு, மஞ்சள்காமாலை அளவு 13 மில்லி கிராம்தான் இருக்கும். ஆனால், இக்குந்தைக்கு, 35 மில்லிகிராம் இருந்தது.


ரத்தத்தில், ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தது. ''உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த குழந்தைக்கு, இரண்டு முறை ரத்தமாற்று சிகிச்சை அளித்தும் உடல்நிலையில் மாற்றம் இல்லை. ரத்த அணு தன்னைத் தானே அழித்துக் கொள்ள கூடிய 'இம்யூன் ஹீமோலைடிக் அனீமியா' என்ற அரியவகை நோய் இருப்பது கண்டறியப்பட்டது.


''மருத்துவமனை டீன் காளிதாஸ், 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஊசி மருந்தை, தமிழ்நாடு மருத்துவ கழகத்திடம் இருந்து உடனடியாக வாங்கி கொடுத்தார். ''இம்மருந்தை செலுத்திய மூன்று நாட்களில் மஞ்சள் காமாலை சீராக, ஹீமோகுளோபின் அளவும், ஆறில் இருந்த 16 ஆக உயர்ந்தது. இதனால், இப்போது குழந்தை பூரண குணமடைந்துள்ளது,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X