கோவை முத்தண்ணன் குளக்கரையில் 300 ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2020
00:06

கோவை:'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள, ஒன்பது குளங்கள் மேம்படுத்தப்படுகின்றன. குளத்தை சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. கரையை ஆக்கிரமித்து வசிப்பவர்களுக்கு, குடிசை மாற்று வாரியத்தால் மாற்று வீடு வழங்கி, ஆக்கிரமிப்பு அகற்றப்படுகிறது.முத்தண்ணன் குளக்கரையில், 2,150 ஆக்கிரமிப்பு வீடுகள் இருக்கின்றன. இதில், 1,577 குடும்பத்தினர் மாற்று வீடு பெற்றனர்.


அதில், 1,092 குடும்பத்தினர் வீட்டை காலி செய்தனர். ஆக்கிரமிப்பு வீடுகளில் வசித்தவர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியது.இதைத்தொடர்ந்து, வீடு வீடாகச் சென்று, மின் இணைப்பு துண்டிக்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர். மாநகராட்சி மேற்கு மண்டல உதவி கமிஷனர் செந்தில் அரசன், நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன், நிர்வாக பொறியாளர் சரவணக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கும் பணி நேற்று துவங்கியது; ஒரே நாளில், 300 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'நீர் நிலைகளை ஆக்கிரமித்து வசிப்போருக்கு மாற்று இடம் வழங்கி விட்டு, கட்டடங்களை இடித்து அகற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


மாற்று வீடு வழங்கி விட்டு, இடிக்கிறோம். முத்தண்ணன் குளத்தில், 60 ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. படிப்படியாக அனைத்து வீடுகளும் இடித்து அகற்றப்பட்டு, குளம் மீட்டெடுக்கப்படும்' என்றனர்.குடிசை மாற்று வாரியத்தினர் கூறுகையில், 'மொத்தமுள்ள, 2,150 வீடுகளில், 1,577 குடும்பத்தினர் குலுக்கலில் பங்கேற்று, மாற்று வீடு பெற்றுள்ளனர். மீதமுள்ள வீடுகள் பூட்டி கிடக்கின்றன. சிலர், மாற்று வீடு பெற ஆர்வமில்லாமல் இருக்கின்றனர். அனைத்து பயனாளிகளுக்கும் மாற்று வீடு வழங்கப்படுகிறது. ஆதார் அட்டை காண்பித்து, குலுக்கல் முறையில் வீடு பெற்றுக் கொள்ளலாம்' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X