ஆர்.சி., புக்கில் பெயர் மாற்றி மோசடி அம்பலம்:பொள்ளாச்சி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் புரோக்கர் அத்துமீறல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2020
00:32

பொள்ளாச்சி:பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், வாகன ஆர்.சி., புத்தகத்தில் பெயர் மாற்றி மோசடி செய்த, புரோக்கர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடுகின்றனர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், 'பைனான்ஸ்' இணைப்பு ரத்து செய்வதற்காக, 'பார்ம் 35' விண்ணப்பம், 'ஆன்லைன்' வாயிலாக பதிவு செய்ய வேண்டும், என, உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



இந்நிலையில், வாகனம் எங்களது பெயரில் இருந்தாலும், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் உள்ள ஆர்.சி., புத்தகம் பதிவு ஆவணத்தில் வேறு பெயர் உள்ளதாக, வாகன உரிமையாளர்கள் சிலர் புகார் தெரிவித்தனர். ஆன்லைனில் பதிவு செய்த விபரங்களை சரிபார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.சின்னாம்பாளையத்தை சேர்ந்த அங்குலிங்கம் மற்றும் சிலரது பெயருக்கு, ஆர்.சி., புத்தகத்தில் பெயர் மாற்றம் செய்துள்ளதை கண்டறிந்த, வட்டார போக்குவரத்து அலுவலர், கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார்.புரோக்கர் 'தில்லுமுல்லு'புகாரில், 'ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், ஏஜன்டாக (புரோக்கர்) வேலை செய்து வந்த நபர், பல்வேறு வாகன உரிமையாளர்களிடம், ஆர்.டி.ஓ., அலுவலக வேலைகளுக்காக ஆர்.சி., புத்தகம், பர்மிட் ஆகியவை வாங்கியுள்ளார்.


ஆர்.டி.ஓ., அலுவலக கணினியை பயன்படுத்தி, தனது பெயருக்கும், அவரது மனைவி மற்றும் அண்ணன் பெயருக்கும் மாற்றி ஆர்.சி., புத்தகங்களை, ஸ்மார்ட் கார்டாக பெற்று, அவற்றை பைனான்ஸ் நிறுவனத்தில் அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளார். வாகன உரிமையாளர்கள் மற்றும் பைனான்ஸ் நிறுவனத்தை ஏமாற்றி மோசடி செய்துள்ளார். புகாரின் அடிப்படையில், புரோக்கர் அங்குலிங்கம் மற்றும் அவருடன் தொடர்புள்ளவர்களை போலீசார் தேடுகின்றனர்.


சிக்கப்போவது யார்?


அதிகாரிகள் கூறியதாவது:ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், கணினியை பயன்படுத்துபவர் பெயர் மற்றும் ரகசிய எண்ணை (பாஸ்வேர்டு) பயன்படுத்தி, பலரது வாகனத்தின் ஆர்.சி., ஆவணங்களை, அங்குலிங்கம் தங்களது பெயருக்கு ஸ்மார்ட் கார்டில் மாற்றி பைனான்ஸ் பெற்றுள்ளார். மொத்தம், 11க்கும் மேற்பட்ட வாகனங்களின் பெயர்களை மாற்றி, மோசடி செய்துள்ளார்.


இது குறித்து, பாதிக்கப்பட்ட உரிமையாளர்கள், ஆர்.சி., புத்தகம் வேறு பெயரில் இருப்பதாக கொடுத்த புகாரின்படி, ஆய்வு செய்ததில் உண்மை நிலவரம் தெரிய வந்துள்ளது.கடந்த, 2019ம் ஆண்டு மார்ச் முதல், 2020 ஜன., வரை மோசடி செய்துள்ளது, ஆய்வில் தெரிய வந்துள்ளது. எவ்வளவு கடன் வாங்கியுள்ளார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. அந்த நபருடன் தொடர்பில் இருந்த, அலுவலக ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-ஜூன்-202004:05:32 IST Report Abuse
K. R. RAMAKRISHNAN ஏற்கனவே RTO லஞ்ச ஊழல்கள் மிகவும் பிரசித்தி பெற்றது. இதுவேற. சதா சர்வ காலமும் புதிது புதிதாக எப்படி ஊழல் செய்யலாம் என்று யோசிப்பார்கள் போல.
Rate this:
Cancel
babu -  ( Posted via: Dinamalar Android App )
07-ஜூன்-202023:40:37 IST Report Abuse
babu அதற்காக RTO மற்றும் அதிகாரிகளை யாரும் சந்தேகப்பட்டீராதிங்க. அதிகாரத்தில் இருப்பவர்களை சந்தேகப்படுவது தேசத்துரோகம்.
Rate this:
Cancel
RADE - loch ness,யுனைடெட் கிங்டம்
07-ஜூன்-202010:44:58 IST Report Abuse
RADE வெட்டி பயலுக
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X