கோவிலம்பாக்கம் ஏரிக்கு விமோசனம் எப்போது?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2020
23:08

கழிவு நீர் சேகரிப்பு மையம், கால்நடைப் பண்ணை, குப்பைக் கிடங்கு என, பல ரூபங்களாக காட்சியளிக்கும் கோவிலம்பாக்கம் ஏரி, எப்போது தான் மழைநீர் சேகரிப்பு மையமாக மாறும் என்ற கேள்வி எழுந்துள்ளது.



நவீன தொழில்நுட்பங்கள் இல்லா காலத்திலேயே, மதி நுட்பத்தால், நிலத்தன்மை, மண் வளம், நீர்போக்கு ஆகியவற்றை ஆராய்ந்து, மும்மாரியை சேமிப்பதற்காக, ஏரிகளை உருவாக்கினர் நம்முன்னோர்கள்.அவர்கள், குட்டையை குளமாக்கி, குளத்தை ஏரிகளாக்கும் திறமை கொண்டிருந்தனர். அதே ஏரியை குளமாக்கி, குட்டையாக்கி, மாயமாக்கும் வித்தையை தற்போது, பொதுப்பணித்துறை செய்து காட்டி வருகிறது.



இதற்கு, சென்னை நகரில் உள்ள பல ஏரிகள் சாட்சியாக உள்ளன.அதேபோல, மழை நீர் சேகரிக்க வேண்டிய பல ஏரிகள், போக்கு கால்வாயை சாக்கடையாக மாற்றி, கழிவு நீர் சேகரிப்பு மையமாக மாற்றப்பட்டு வருகிறது. இதற்கு உதாரணம் கோவிலம்பாக்கம் ஏரி.காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள கோவிலம்பாக்கம் ஏரி, பெரிய ஏரிகளில் ஒன்று. கடந்த, 50 ஆண்டுகளுக்கு முன், 180 ஏக்கர் பரப்பளவுடன் காணப்பட்டது.இந்த ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதி, உள்ளூர் அரசியல்வாதிகள், ஆக்கிரமிப்பாளர்களால் கூறு போடப்பட்டு விற்கப்பட்டது.



புறம்போக்கை விற்றே, கோடீஸ்வரர்களாக வலம்வருகின்றனர், பல கரை வேட்டிகள். அவர்களுக்கு துணையாக பல துறைகள் அடிப்படை வசதிகளை செய்துக் கொடுத்தது.அதன் விளைவு, கடந்த, 30 ஆண்டுகளில் கோவிலம்பாக்கம் ஏரி, 70 ஏக்கருக்கும் குறைவாக சுருங்கி விட்டது.ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியை ஆக்கிரமித்து, ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்களின் குப்பை தொட்டி, கழிவு நீர் சேமிப்பு தொட்டி, அவர்களின் மாட்டு தொழுவம், கோழி, பன்றி பண்ணையாகவும் கோவிலம்பாக்கம் ஏரி மாறிவிட்டது.




கடந்தாண்டு ஏற்பட்ட கடும் தண்ணீர் பஞ்சம் காரணமாக, நம நாளிதழ், 'களமிறங்கவோம்; நமக்கு நாமே' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியது.ஆனால், இந்த ஏரியை, சமூக ஆர்வலர்கள் கூட சுத்தப்படுத்த முன்வரவில்லை. காரணம், சுத்தப்படுத்த இறங்கினால், உயிர் பலி நிச்சயம் என்ற அச்சம் தான்.தற்போது, எஞ்சியுள்ள ஏரியை காப்பாற்ற கரைகளை சுற்றிலும் பலப்படுத்த வேண்டும். ஏரியில் கழிவு நீர் கலப்பதை உடனடியாக தடுக்க வேண்டும்.நன்மங்கலம் ஏரியில் இருந்து, வரத்துக் கால்வாயை கண்டுபிடித்து, கோவிலம்பாக்கம் ஏரியுடன் இணைக்க வேண்டும்.ஏரியில் உள்ள கழிவுகளை அகற்றி, ஆழப்படுத்தி, மழை நீர் மட்டும் சேகரிக்க வழி செய்ய வேண்டும் என்பது, சமூக ஆர்வலர்கள் விருப்பம்.




- -நமது நிருபர்- -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ravi - chennai,இந்தியா
01-ஜூலை-202009:04:29 IST Report Abuse
ravi இருங்கள் பொதுப்பணித்துறை லஞ்சம் வராமல் எதையும் செய்யமாட்டார்கள்..
Rate this:
Cancel
Parthasarathy - Hosur,இந்தியா
30-ஜூன்-202019:17:01 IST Report Abuse
Parthasarathy வணக்கம் எடிட்டர் அவர்களே எங்கள் ஹோசூரின் மிகப்பெரிய தர்கா ஏரி நாலு புறங்களிலும் கார்பொரேஷன் ஆசிர்வாதத்துடன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குளமாக மாற்றப்படுகிறது தயை கூர்ந்து அதை பற்றி ஏழுதுவீர்களா. முழு கொள்ளளவும் நீர் நிரம்பி உள்ள ஏரியில், ஊரில் உள்ள எல்லா கன்ஸ்ட்ரக்ஷன் மண்ணும் குப்பைகளும் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன மேலும் கார்பொரேஷன் குப்பையும் நீரில் கொட்டப்படுகின்றன. ஹோசூரின் மற்ற எல்லா ஏரிகளும் ஏற்கெனவே நீர் வழி அடைக்கப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வறண்டுவிட்டன. தயவு செய்து இதை பற்றி எழுதி எங்கள் ஏரியை காப்பாற்றுங்கள். இப்படிக்கு பார்த்தசாரதி
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
30-ஜூன்-202012:09:56 IST Report Abuse
Lion Drsekar அப்படி நடவடிக்கை எடுத்தால் எப்படி வீட்டு மனை அங்கீகாரம் கொடுக்கமுடியும், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X