முடிச்சூர் பெரிய ஏரி மதகுகள் சீரமைப்பு எப்போது?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2020
22:53

முடிச்சூர் : முடிச்சூர் பெரிய ஏரி மதகுகள் மற்றும் கலங்கலை சீரமைப்பதில், பொதுப்பணித் துறை அதிகாரிகள், தொடர்ந்து போக்கு காட்டி வருவது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.



சென்னை, தாம்பரம் அடுத்த முடிச்சூர் பெரிய ஏரி, 112 ஏக்கர் பரப்பளவும், 17 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்டது.ஏரியின் மேற்கு பகுதியில், வண்டலுார்- - மீஞ்சூர் வெளிவட்ட சாலை அமைக்கப்பட்டதால், 20 சதவீதம் நீர்பிடிப்பு பகுதி காலியானது.கடைசியாக, 2014 -- 15ம் ஆண்டில், பொதுப்பணித் துறையால், 8 அடி வரை துார் வாரி ஆழப்படுத்தப்பட்டது.அதன்பின், துார் வாரப்படாத நிலையிலும், இன்று வரை தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதே நேரம், ஏரியின் கலங்கல் மற்றும் மதகுகள் சேதமடைந்துள்ளன.



இந்நிலையில், நீர்நிலைகளை சீரமைக்க, 'களமிறங்குவோம்; நமக்கு நாமே' என, நலச்சங்கங்கள், தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்து, நம் நாளிதழில், 2019 ஜூனில் அறிவிப்பு வெளியானது.தொடர்ந்து, ஏரியின் கலங்கல் மற்றும் கரைப் பகுதியை பலப்படுத்த வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கை, நிறைவேற்றப்படாமலேயே உள்ளது.



இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:ஏரியின் கிழக்கு பகுதி கரைகளில், பெருங்களத்துார் பேரூராட்சி குப்பை கொட்டப் பட்டு, தொடர்ந்து நாசமாகிறது.2015ல் பெய்த கன மழையை அடுத்து, ஏரியின் உபரிநீர் வழியும் கால்வாய்களில், 4,௦௦௦ மணல் மூட்டைகள் கொண்டு, பொதுமக்களால் அடைக்கப்பட்டது.அதன்பின், ஏரி நீர் வெளியேறுவதை கட்டுப்படுத்தும் வகையில், மதகுகள் அமைத்து தர வேண்டும் என எழுப்பப்பட்ட கோரிக்கை, இன்று வரை, பொதுப்பணித் துறை அதிகாரிகள், காதில் விழுந்த மாதிரியே தெரியவில்லை.



மேலும், பெருங்களத்துார் பேரூராட்சியின் கழிவு நீர் கலப்பதும் தொடர்கிறது. கழிவு நீர் கலப்பதை தடுத்து, மழைக்காலங்களில், பெருங்களத்துார் ஏரியின் உபரி நீர், முடிச்சூர் பெரிய ஏரியின், கிழக்கு பகுதிக்கு சீராக வர, கால்வாயை சீரமைக்க வேண்டும்.ஏரியின் கிழக்குப் புற கரையில், கழிவு நீர் கலப்பதை தடுத்து, சுத்திகரிப்பு மையம் அமைக்க வேண்டும்.ஏரிக்குள், 10 அடி வரை மண் எடுத்து, துார் வாரி ஆழப்படுத்துவதுடன், கிழக்கு பகுதியில் உள்ள கலங்கல் மற்றும் மேற்கு பகுதிகளில் சேதமடைந்துள்ள மதகை சீரமைக்க வேண்டும்.இவற்றை செய்தால், ஏரியில் கூடுதலாக தண்ணீர் சேமிக்கலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-ஜூலை-202007:22:49 IST Report Abuse
ஆப்பு நூறு வருஷத்துக்கு ஒருமுறை பெய்யும் கனமழை 2015 லேயே பெஞ்சுட்டதால், இனிமே மழை வராது. 3015 க்குள்ளாற மதகுகளை சீரமைத்து விடுவோம்னு உறுதி தெரிவிக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X