தாம்பரம் நெஞ்சக நோய் மருத்துவமனையில் 500 படுக்கைகளுடன் கொரோனா வார்டு தயார்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2020
23:00

குரோம்பேட்டை : புறநகர் பகுதி மக்களின் வசதிக்காக, தாம்பரம், சானடோரியம் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில், 500 படுக்கை வசதிகளுடன் கூடிய, வகைப்படுத்துதல் வார்டு அமைக்கப்பட்டுள்ளது.



தாம்பரம், பல்லாவரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், கொரோனா சிகிச்சை அல்லது பரிசோதனை செய்ய வேண்டும் எனில், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டும். இதைவிட்டால், சென்னை அல்லது செங்கல்பட்டிற்கு செல்ல வேண்டியுள்ளது.



இந்நிலையில், குரோம்பேட்டை மருத்துவமனையில், காய்ச்சல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகளுடன் வருவோரை அலைக்கழிப்பதாகவும், தேவையில்லாமல் செங்கல்பட்டிற்கு அனுப்புவதாகவும், தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது.இந்நிலையில், புறநகர் பகுதி மக்களின் வசதிக்காக, சானடோரியம் அரசு நெஞ்சக நோய் மருத்துவ மனையில், அனைத்து வசதிகளுடன் சிகிச்சை அளிக்கும், வகைப்படுத்துதல் வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டு, இன்று முதல் பயன்பாட்டிற்கு வருகிறது.



இந்த வார்டை, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர், நேற்று பார்வையிட்டனர்.அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:புறநகர் பகுதிகளில், கொரோனா உறுதியானவர்கள் சிகிச்சை பெறுவதற்கு, செங்கல்பட்டு அல்லது சென்னைக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால், மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.



இதை கருத்தில் வைத்து, தாம்பரத்திலேயே சிகிச்சை அளிக்கும் வகையில், சானடோரியம் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில், 500 படுக்கை வசதிகளுடன் கூடிய, வகைப்படுத்துதல் வார்டு அமைக்கப்பட்டுஉள்ளது.இதில், 300 படுக்கைகள், ஆக்சிஜன் வசதியுடன் உள்ளன. புறநகர் பகுதிகளில், கொரோனா உறுதியானவர்கள், இங்கு அழைத்து வரப்படுவர். அவர்களுக்கு, ரத்தம், 'எக்ஸ் - ரே' போன்ற பரிசோதனைகள் செய்யப்படும்.



இதில், எவ்வித அறிகுறிகள் இல்லாத நிலையில், தொற்று உறுதியானவர்கள், போதிய வசதிகள் இருப்பின், அவரவர் வீடுகளிலேயே, தனிமைப்படுத்த அனுமதிக்கப்படுவர். மிதமான அறிகுறிகள் இருப்பவர்கள், அந்த மையத்திலேயே சிகிச்சை பெறுவர்.அதிக பிரச்னை உள்ளவர்கள், செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவர். இதன் மூலம், புறநகர் பகுதி மக்கள், இனி இங்கேயே சிகிச்சை பெறலாம்.இவ்வாறு, அமைச்சர் கூறினார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X