வீணாகாத விடுமுறையும், வீட்டுப் பொருட்களும் ஊரடங்கை உருப்படியாக்கிய மாணவர்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2020
01:54

திண்டுக்கல்:கொரோனா ஊரடங்கு விடுமுறையை வீணாக்காமல், வீணாகும் பொருட்களை பயன்படுத்தி படைப்பாற்றலை வளர்த்த மாணவர்களை பாராட்டாமல் இருக்க முடியாது.

கொரோனா முன்னெச்சரிக்கையாக நுாறு நாட்களை கடந்தும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.



ஊரடங்கு நீட்டிப்பால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பள்ளிக் காலம் வீணாகிறதே என கவலைப்படுகின்றனர். பள்ளி மாணவர்கள் பலரும் கேட்காமல் கிடைத்த வரமாக கருதி, கொரோனா விடுமுறையை கொண்டாடி வருகின்றனர்.'டிவி'யில் கார்டூன், டிஸ்கவரி, திகில் படங்கள் பார்த்தும், அலைபேசியில் வீடியோ கேம்கள் விளையாடியும் சலித்து போன

குழந்தைகள், கூண்டுக்குள் அடைப்பட்ட பறவைகள் போல் கருதி, இறக்கை விரித்து நண்பர்களுடன் வெளியே சென்று விளையாட துடிக்கின்றனர்.



ஆனால் நோய் அச்சத்தில் வெளியே அனுப்ப பெற்றோர்கள் கறார் காட்டி வருகின்றனர்.

இன்னும் சில குழந்தைகளோ 'டிவி' இன்டர்நெட்டில் மூழ்கிக் கிடக்காமல் ஓவியம் வரைதல், வீணாகும் பொருட்களில் கலை பொருட்கள் செய்தல், ஆடை வடிவமைப்பு, தோட்ட பராமரிப்பு போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். ஊரடங்கில் முடங்கி கிடக்காமல் திறமைகளை தட்டி எழுப்பி, இந்த உலகிற்கு தங்களை அடையாளப்படுத்த முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இது போன்ற மாணவர்களை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். இவ்வகையில் வீட்டில் ரெம்ப பிஸியாக இருந்த சில மாணவர்களை சந்தித்தோம். அவர்களின் படைப்புகள் அவர்களின்

திறமையை வெளிப்படுத்துவதாக உள்ளன.



கலைப் பொருட்கள் தயாரிப்பு



ஓவியம் வரைவதில் ஆர்வம் அதிகம். கொரோனா விடுமுறையை 'டிவி', அலைபேசியில் க

ழிப்பதை விட, பயனுள்ளதாக செலவு செய்ய திட்டமிட்டேன். தினமும் 4 மணி நேரம் ஒதுக்கி இயற்கை காட்சிகள், பொருட்கள், சாமி உருவங்களை ஓவியமாக வரைவேன். வீட்டில் பயன்

படுத்தி துாக்கி வீசும் பொருட்களை கலைப் பொருட்களாக மாற்ற முடிவு செய்தேன்.முட்டை ஓட்டில் வண்ணம் தீட்டி பூச்சிகள், பூக்கள் வரைந்துள்ளேன். கண்ணாடி, பிளாஸ்டிக்

பாட்டில்களை பூங்கொத்து ஸ்டாண்டாகவும், தேங்காய் சிரட்டையை சிப்பி போன்றும், அட்டை பெட்டியை துளசி மாடம், கிருஷ்ணர், பேப்பரை நீர்வீழ்ச்சி, பூக்களாக மாற்றியிருக்கிறேன்.



கண்ணாடி பாட்டிலில் காபித்துாளை கொண்டு பெயின்டிங் செய்துள்ளேன். தேவையில்லாத குச்சி, கயிறுகளை சேர்த்து ஊஞ்சல் வடிவமைத்துள்ளேன். கலைப் பொருட்கள் செய்யும்

முறைகள் பிறருக்கும் பயனாக இருக்கும்படி வீடியோ பதிவும் செய்துள்ளேன். தினமும் இதில் கவனம் செலுத்துவதால் நேரம் போவதே தெரியவில்லை. எனக்குள் புதைந்த திறமையை வெளிக்கொணர உதவிய அப்பா, அம்மாவுக்கு நன்றி.



- ரேஷ்மி ஸ்ரீ, 7ம் வகுப்பு, திண்டுக்கல்.


பெற்றோர் ஊக்கமே காரணம்



பள்ளிப் படிப்பு ஆரம்பம் முதலே பொம்மை, விளையாட்டு பொருட்கள் மீது ஆர்வம் உண்டு. உறவினர் பரிசாக தந்த பொம்மை கார் சேதம் அடைந்த போது, ஏன் வேறு காரை வாங்க

வேண்டும் இதை நாமே சரி செய்யலாம் என்று எண்ணினேன். அன்று முதல் அட்டைக் கத்தி, கைத்துப்பாக்கி, இயந்திர துப்பாக்கி, ஐந்தறை பெட்டி, சூட்கேஸ் என பல பொருட்களை பல

வண்ணங்களில் தயாரித்து பழகி வருகிறேன். எனது தயாரிப்பை நண்பர்களுக்கு பரிசாக்குவேன். இதற்கு பெற்றோர் ஊக்கமளிக்கின்றனர். உயர்கல்வி முடித்தபின்னர், இந்திய ராணுவ தளவாட உற்பத்தி மையத்தில் பணியாற்றி பல கண்டுபிடிப்புகளை உருவாக்க ஆர்வமாக உள்ளேன்.



-தஜ்மல் அக்தர், 7ம் வகுப்பு, நத்தம்



ஆடையில் பெயின்டிங்



நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு விடுமுறை கிடைத்துள்ளது. 'டிவி', அலைபேசி பார்த்து சலித்து விட்டது. ஏதாவது பிரயோஜனமா பண்ணலாம்னு பிளான் பண்ணினேன். கொஞ்சம் பெயின்டிங் பண்ணுவேன். பேப்பரில் வரைந்த ஓவியங்களை, குர்தி, சுடிதார், பிளவுஸ்சில் வரைஞ்சா எப்படி இருக்கும்னு யோசிச்சேன். தினமும் 2 மணி நேரம் ஒதுக்கி, எனக்கு பிடித்த படங்களை துணியில் வரைந்தேன். எல்லாருக்கும் ரொம்பவே பிடிச்சது. ஆடைக்கு மேட்சாக மாஸ்கிலும் ஓவியம் வரைவேன்.



மாஸ்கில் இருக்கும் படங்கள், மாடலை பார்த்திட்டு பலரும் இதை எங்க வாங்குனீங்கனு

கேட்குறாங்க. என்னுடைய ஓவியத்திற்கு குடும்பத்தினர் மிகப்பெரிய ரசிகர்கள். படம் வரைய பெயின்டிங், பொருட்கள் எல்லாம் பெற்றோர் வாங்கி தந்தாங்க. என் பாட்டி சொல்லிக் கொடுத்த மாதிரி வயர் கூடையும் பின்னுவேன். இதுவரை 3 கூடை பின்னியிருக்கேன். பத்தாவது

படிக்கிறதுனால தினமும் ஆன்லைன் வகுப்பு உண்டு. இருந்தாலும் நேரம் கிடைக்கும்

போதெல்லாம் என்னுடைய திறமையை வளர்த்து கொள்கிறேன். உங்கள் திறமையை

அடையாளம் கண்டு இந்த விடுமுறையை பயன்படுத்துங்களேன்.



- சுஷ்மி, 10ம் வகுப்பு, திண்டுக்கல்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X