மழை துவங்கியதால் அச்சம்: கொரோனா குறித்து கவலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2020
23:41

பொள்ளாச்சி:பொள்ளாச்சி பகுதியில் மழை தீவிரமடைந்துள்ள நிலையில், பொதுமக்களிடையே கொரோனா நோய் பரவல் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.பொள்ளாச்சி பகுதியில், ஜூன் முதல் வாரத்தில் துவங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை தாமதமானதால், விவசாயிகள் கவலையில் இருந்தனர்.இந்நிலையில், சில நாட்களாக துாறல் மழை துவங்கி நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. மழை பெய்ய துவங்கியுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ள அதே நேரம், பொதுமக்களிடையே மழையால் அச்சம் ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே, பொள்ளாச்சி பகுதியில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், மழையால் மாறியுள்ள பருவநிலை மற்றும் குளிர்ந்த சீதோஷ்ணம், வைரஸ் பரவலை அதிகரிக்கும் என பரவும் தகவலே இதற்கு காரணம்.சில நாட்களுக்கு முன், 'டிவி'யில் உரையாற்றிய பிரதமர் மோடியும், பருவமழைக்காலத்தில் பொதுமக்கள் கொரோனா பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.இதனால், மழைக்காலத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்பது விஞ்ஞானபூர்வமாக உண்மையா என்பதை, சுகாதார துறையும், பிற அரசுத்துறைகளும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.மேலும், மழைக்காலத்தில் பொதுமக்கள், நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில், கூடுதல் கவனம் செலுத்த அரசு அறிவுறுத்த வேண்டும், என, சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X