| ஊரடங்கால் முடங்கிய அச்சக தொழில் Dinamalar
ஊரடங்கால் முடங்கிய அச்சக தொழில்
Advertisement
 

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2020
01:47

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நானூறுக்கும் மேற்பட்ட அச்சகங்களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர் குடும்பங்களும் இருக்கின்றனர்.



தற்போது கொரோனா ஊரடங்கால் எந்த சுப நிகழ்ச்சிகளும் பத்திரிக்கைகள் அச்சிட்டு நடப்பது இல்லை. வெற்றிலை, பாக்குடன் உறவினர்களை அழைத்துக் கொள்வதால், அழைப்பிதழுக்கு அவசியமின்றி போய்விட்டது. மார்ச் இறுதி நிதியாண்டு முடிவுறும் மாதம் என்பதால் பில் புக்குகள் அதிகம் அச்சிடுவர்.இந்தாண்டு கொரோனாவால் அதற்கு வழியில்லாமல் போய்விட்டது என்கின்றனர்



அச்சக உரிமையார்கள்.திண்டுக்கல் அச்சக உரிமையாளர் வரதராஜன் கூறியதாவது: ஆயிரம் திருமண பத்திரிக்கை அச்சிடும் செலவும், 50க்கான செலவும் ஒன்றுதான். 50 பேரை வரவழைக்க ரூ.ஆயிரம் செலவிடுவதா என பொதுமக்கள் தயங்குகின்றனர். வணிக வளாகங்களில் விற்பனையில்லை என்பதால் பில் புக்குகளை தவிர்க்கின்றனர். இதனால் தொழில் நசிந்து தவிக்கிறோம், என்றார்.



அச்சக பணியாளர் துர்கா கூறியதாவது : மூன்று மாதங்களுக்கும் மேலாக இயந்திரங்கள் இயங்க வில்லை. அவ்வப்போது வரும் சில நோட்டீஸ்களை அச்சிட இயந்திரங்களை இயக்குவதால் வருமானமும் போதுமானதாக இல்லை. இதே நிலை தொடர்ந்தால் கருவிகள் துருப்பிடித்து கஷ்டமே மிஞ்சும். தற்போது அனைத்து பண்டிகை காலங்களும் முடிந்து விட்டது. அச்சக தொழிலை சார்ந்த பிறதொழில்களும் பாதித்துள்ளன, என்றார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X