'கோவையில் கொரோனா கண்டறிய 5,000 சிறப்பு மருத்துவ முகாம்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2020
03:12

கோவை:''கோவை மாவட்டம் முழுவதும், சளி, காய்ச்சல் போன்ற அறிகுறியுள்ளவர்களை கண்டறிய, 5,000 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளன,'' என, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.கலெக்டர் அலுவலக அரங்கில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் வேலுமணி தலைமையில் நேற்று நடந்தது.இதில், அவர் பேசியதாவது:கோவையில், 10 லட்சம் குடும்பங்களுக்கு, கபசுர குடிநீர், ஆர்சனிக் ஆல்பம், ஜிங்க் மாத்திரைகள், மல்டி விட்டமின் மாத்திரைகள், வழங்கும் பணிகள் நடந்துவருகின்றன. மாவட்டம் முழுவதும், 5000 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தி, சளி, காய்ச்சல் அறிகுறியுடன் உள்ளவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.தற்போது, இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், 149 மருத்துவர்கள், 146 செவிலியர்கள், 268 பணியாளர்கள் சுழற்சி முறையில், 24 மணி நேரம் பணி மேற்கொண்டு வருகின்றனர்.கோவையில் ஆரம்பத்தில் இருந்த ஒத்துழைப்பு, மக்களிடம் தற்போது இல்லை. முககவசம், சமூக இடைவெளி குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வெளிமாநிலம், மாவட்டத்தில் இருந்து வந்தவர்கள், 8,302 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை, 60 ஆயிரத்து 282 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்ததில், 608 நபர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 318 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்; 287 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.'கொரோனா அரசியல்'அமைச்சர் வேலுமணி கூறுகையில், ''கொரோனா தொற்று உயிர் பிரச்னை என்பது புரியாமல், அதை வைத்து பலர் அரசியல் செய்கின்றனர். கோவையில் தனி ஊரடங்கு அமல்படுத்தாமல் இருப்பதற்கு, என் மகளுக்கு திருமணம் வைத்திருப்பது தான் காரணம் என்கின்றனர். என் மகள் தற்போது தான், பள்ளியில் படிக்கிறாள். இச்சூழலை வைத்து அரசியல் செய்வது சரியல்ல,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X