| ஜிப்மரில் அதிகரிக்கும் கொரோனா விசாரணைக்கு கலெக்டர் உத்தரவு Dinamalar
ஜிப்மரில் அதிகரிக்கும் கொரோனா விசாரணைக்கு கலெக்டர் உத்தரவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2020
05:19

புதுச்சேரி : ஜிப்மரில் வளாகத்தில் அதிகமானவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவது குறித்த விசாரணைக்கு கலெக்டர் அருண் உத்தரவிட்டுள்ளார்.



ஜிப்மர் வளாகத்தில் டாக்டர்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் சேர்த்து 56 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேவையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட போதும், டாக்டர்கள் உள்ளிட்டோருக்கு ஜிப்மர் வளாகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது சம்மந்தமான விசாரணைக்கு கலெக்டர் அருண் உத்தரவிட்டுள்ளார். சுகாதாரத்துறை சிறப்பு பணி அலுவலர் முரளிதரன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.



அவர் ஜிப்மர் வளாகத்திற்கு நேரடியாக சென்று விசாரணை நடத்துவார். கொரோனா அதிகமாக பரவலுக்கான காரணம், யார் அலட்சியமாக இருந்தது என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்வார். ஜிப்மர் இயக்குனர் விசாரணை அதிகாரிக்கு தேவையான ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். மாநில சுகாதாரத்துறை இயக்குனர் விசாரணை அதிகாரிக்கு தேவையான டாக்டர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை அமைத்துத்தர வேண்டும்.ஜிப்மர் வளாகத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள், கட்டுப்பாட்டு மண்டலம், இது சம்மந்தமான விவரங்களை கொடுப்பதற்காக சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரை விசாரணை குழுவிற்கு உதவுமாறு உழவர்கரை தாசில்தார் ஏற்பாடு செய்ய வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X