அரியலூர்: லஞ்சம் வாங்கி கைதான, மின் வாரிய வணிக ஆய்வாளர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். அரியலூர் மாவட்டம், நல்லாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், 43; பெரம்பலூர் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில், வணிக ஆய்வாளராக பணியாற்றினார். நொச்சியம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம், மும்முனை மின் இணைப்பு வழங்க, விண்ணப்பித்தார். அவரிடம், ஜூன், 29ம் தேதி, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பாலசுப்பிரமணியனை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதையடுத்து, பாலசுப்பிரமணியனை, 'சஸ்பெண்ட்' செய்து, பெரம்பலூர் மின் வாரிய செயற்பொறியாளர் ராஜேந்திரன் நேற்று உத்தரவிட்டார்.