ஊரடங்கால் வியாபாரிகளின் கையை 'சுட்ட' நாவல்பழம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2020
18:35

மதுரை:
மதுரையை சுற்றியுள்ள கிராமங்களில் நாவல் பழம் விளைச்சல் அதிகமாக இருந்தும் ஊரடங்கால் 'சீசன்' களைகட்டாததால் வியாபாரிகள் நஷ்டத்தில் தவிக்கிறார்கள்.


அலங்காநல்லுார், பாலமேடு, வாடிப்பட்டி, குட்லாடம்பட்டி, முடுவார்பட்டி, அழகர்கோவில், நத்தம், முளையூர் பகுதியில் நாவல் பழங்கள் அதிகம் விளைகின்றன. வியாபாரிகள் இரவில் பழங்களை சேகரித்து மதுரை மொத்த பழக்கடைகளில் விற்பது வழக்கம். தற்போதுள்ள ஊரடங்கால் இரவில் பழங்களை மொத்த கடைகளுக்கு கொண்டு வரமுடியவில்லை. ரூ.300 - ரூ.500 வரை விற்க வேண்டிய ஒரு கிலோ நாவல் பழங்களை ரூ.150க்கு கொடுத்தாலும் வாங்க ஆளில்லை. இந்தாண்டு விளைச்சல் அதிகமாக இருந்தும் பழங்கள் விலை போகவில்லை.



வியாபாரி செந்தில் கூறியதாவது: ஒரு மாதம் முன் ஆந்திரா நாவல் பழங்கள் கிலோவுக்கு ரூ.250 முதல் விற்றது. நம்மூர் பழங்கள் தன்மையை பொறுத்து கிலோ ரூ.200 - ரூ.300க்கு விற்கும். மாட்டுத்தாவணி பழ மார்க்கெட் மூடப்பட்டு அப்பன் திருப்பதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஊரடங்கால் வியாபாரிகளால் பழங்களை மார்க்கெட்டிற்கு கொண்டு வர முடியவில்லை. இதனால் சீசன் துவங்கியும் விற்பனை மந்தமாக உள்ளது, என்றார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
06-ஜூலை-202018:41:55 IST Report Abuse
RajanRajan இத்தனை தொழில் முடக்கத்திலும் காய்கறிகள் பழங்களின் விலை எதுவுமே குறையவில்லை ஆனால் விலை கூடியுள்ளது.. எனவே இது வியாபாரிகளுக்கு தான் லாபத்தில் நஷ்டம் என்பதே உண்மை. வியாபாரிகள் எல்லோரும் இஷ்டத்திற்கு விலைவாசி உயர்வை கடைபிடித்து வருகிறார்கள். கஷ்டகாலத்தில் ஒருவருக்கொருவர் நியாயமாக தொழில் செய்ய வேண்டும எனும் அந்த கலாச்சாரமும் சிந்திக்க வேண்டிய ஓன்று தான்..
Rate this:
Cancel
Radhakrishnan Subramanian - Mahé,செசேல்ஸ்
06-ஜூலை-202015:46:57 IST Report Abuse
Radhakrishnan Subramanian கிலோ நாநூறு வரை விற்று நம் வயிற்றிரச்சலை கொட்டி கொண்டார்கள். நூறு ரூபாய் அதற்கு போதுமானது. தினமும் முசிறி யில் கூவுகிறான், வாங்க ஆளில்லை. வியாபாரிகளே கொள்ளை அடிக்காமல் நுகர்வோரையை திருப்தி படுத்துங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X