சமூக இடைவெளியை பின்பற்றி திருமணம் மற்றவர்களுக்கு வழிகாட்டுது 'தமிழ்நாடு'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2020
18:38

மதுரை:

மதுரையில் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின்கீழ் இருக்கும் ஓட்டல் தமிழ்நாட்டில் திருமண மண்டபங்களுக்கு முன்னுதாரணமாக சமூக இடைவெளியை பின்பற்றி 50 பேர் மட்டுமே பங்கேற்கும் வகையில் திருமணம் நிகழ்ச்சி நடந்து வருகிறது.கொரோனாவா பரவல் அச்சுறுத்தலால் திருமண நிகழ்ச்சியில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் பல திருமணங்கள் வீடுகளிலேயே எளிமையாக நடந்தன. திருமணத்தை நம்பியுள்ள பல தொழில்கள் முடங்கின. திருமண மண்டபங்கள் திறக்கப்படாத நிலையில், மதுரை ஓட்டல் தமிழ்நாட்டில் 50 பேர் மட்டுமே பங்கேற்கும் திருமண நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஆவணி முகூர்த்த நாட்கள் அனைத்தும் 'புக்' ஆகிவிட்டன. ஏனெனில் திருமண ஹால் இலவசம். சாப்பாடு செலவு ஒரு நபருக்கு உணவு வகைகளை பொருத்து ரூ.250 முதல் ரூ.350 வரை கட்டணம் வசூலிக்கின்றனர். இது மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.அவர்கள் கூறியதாவது: ஊரடங்கில் ஹால் பயன்படுத்த முடியாமல் இருந்தது. இதனால் உணவு சமைப்பவர்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டனர். அவர்களின் நலன்கருதி தற்போது திருமண நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்குகிறோம். 50 பேருக்கு மேல் வந்தால் அனுமதிப்பதில்லை. முகக்கவசமின்றி வந்தால் அவர்களுக்கு கட்டணம் பெற்று வழங்குகிறோம். சாப்பாடு ஹாலிலும் சமூக இடைவெளிவிட்டு நாற்காலிகளை அமைத்துள்ளோம். திருமண ஹாலுக்கு நுழையும் முன் கைகளை கழுவி, சானிடைசர் மூலம் சுத்தப்படுத்திய பிறகே உள்ளே வர அனுமதிக்கிறோம், என்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X