| கால்நடை கணக்கெடுத்தவர்களுக்கு ஊதியம் வழங்க மனு Dinamalar
கால்நடை கணக்கெடுத்தவர்களுக்கு ஊதியம் வழங்க மனு
Advertisement
 

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2020
22:29

திட்டக்குடி : தேசிய கால்நடை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு ஊதியம் வழங்க கோரி தாசில்தாரிடம் மனு அளிக்கப்பட்டது.



வெலிங்டன் நீர்த்தேக்க பாசன சிறு குறு விவசாயிகள் சங்கத் தலைவர் பேரின்பம் திட்டக்குடி தாசில்தாரிடம் வழங்கிய கோரிக்கை மனு:திட்டக்குடி தாலுகாவில் கடந்த 2018--19 ஆம் ஆண்டுகளில் தேசிய கால்நடை கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. இந்த பணியில் கணக்கெடுப்பாளர்களாக பணிபுரிந்தவர்களுக்கு இதுநாள் வரை ஊதியம் வழங்கப்படவில்லை. தற்போது கொரோனா காலத்தில் போதிய வருமானமின்றி அவதிப்படும் அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X