திண்டிவனம், : திண்டிவனத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.
நகராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார்.டி.ஆர்.ஓ., ஸ்ரேயா பி சிங், சப் கலெக்டர் அனு, நகராட்சி கமிஷனர் ஸ்ரீபிரகாஷ், டி.எஸ்.பி., கனகேஸ்வரி, தாசில்தார் ராஜசேகரன் மற்றும் நகராட்சி, சுகாதாரம், போலீஸ் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகளிடம், திண்டிவனத்தில் நடந்த தடுப்பு பணிகள் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.பின்னர் அவர் பேசுகையில், 'அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்.
நோய் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் யாரும் நுழையாத வகையில் தடுப்புகள் ஏற்படுத்த வேண்டும்.பொது மக்கள் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.குறிப்பாக மருத்துவமனைக்கு சளி, காய்ச்சலுடன் வருபவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.இன்று 5ம் தேதி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதை பொது மக்கள் பின்பற்ற அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். மருந்தகங்கள், பெட்ரோல் பங்க், பால் கடைகள் மட்டும் செயல்பட வேண்டும்' என்றார்.