இழுபறி கொரோானா கேர் சென்டர் திறப்பதில்: தொற்றுடன் வருவோர் அலைக்கழிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2020
23:49

சிவகங்கை: சிவகங்கையில் மிதமான பாதிப்பு உள்ள கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளிக்க கொரோனா கேர் சென்டர் துவக்கப்படாததால் சிரமம் ஏற்பட்டு உள்ளது.


டில்லி, மும்பை, சென்னையில் இருந்து சிவகங்கைக்கு வந்தவர்கள் மூலமே இம்மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவியது. படிப்படியாக இதன் எண்ணிக்கை அதிகரித்து, இன்றைக்கு சமூக பரவல் நிலைக்கு 'கொரோனா' வந்து விட்டது.



இப்படி இருந்தும் மாவட்டத்தில் உள்ள மாவட்ட, வட்டார மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொற்றுடன் வருவோருக்கு சிகிச்சை அளிக்கவில்லை. அனைத்து நோயாளிகளையும் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனர்.இதனால் ஏற்படும் சிரமத்தை தவிர்க்க சர்க்கரை நோய் மற்றும் இருதய நோய் உள்ளவர்களுக்கு தொற்று ஏற்பட்டு, மூச்சு திணறல் உள்ளிட்ட பிரச்னை இருந்தால் மட்டுமே சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பலாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



தொற்றுடன் மிதமான பாதிப்புள்ளவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கி, சித்த மருத்துவம், யோகா செயல்பாடு குறித்து விளக்கம் அளித்து விட்டு தனிமையில் வைக்க வேண்டும். இதற்காக மாவட்ட அளவில் 'கொரோனா கேர் சென்டர்'ஏற்படுத்துமாறு அரசு தெரிவித்தது.கொரோனா தடுப்பு பணி கண்காணிப்பு அலுவலர் மகேசன் காசிராஜன் ஆய்வின் போது இங்கு 18 இடங்களில் 'கொரோனா கேர் சென்டர்' அமைக்கப்பட்டதாக தெரிவித்தார்.



ஆனால், இன்று வரை இந்த சென்டர்கள் செயல்படவில்லை. அதேநேரம் சுகாதாரத்துறை மூலம் வெளிநாடு, மாநிலங்களில் இருந்து வருவோரின் பரிசோதனை முடிவு வரும் வரை அமராவதிபுதுார் அரசு மருத்துவமனை, அரசு மாணவர்கள் விடுதிகளில் தனிமையில் வைத்துஉள்ளனர். 'கேர்' சென்டர் துவக்கப்படாததால், அதிருப்தியான மருத்துவமனை நிர்வாகம் தொற்றுடன் மிதமான பாதிப்புடன் வருவோருக்கு மாத்திரை வழங்கி, மீண்டும் சுகாதாரத்துறையினரிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்துஉள்ளது.



நோயாளிகள் உரிய பராமரிப்பு கிடைக்காமல், அலைக்கழிக்கப்படுகின்றனர்.மாவட்ட கலெக்டர், கண்காணிப்பு அலுவலர்தெரிவித்தபடி 18 'கொரோனா கேர் சென்டர்' களையும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X