| மலைச்சரிவில் கட்டடங்கள் ஆய்வு நடத்த உத்தரவு Dinamalar
மலைச்சரிவில் கட்டடங்கள் ஆய்வு நடத்த உத்தரவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2020
01:08

ஊட்டி:ஊட்டி அருகே, விதிமீறி செங்குத்தான மலைச்சரிவுகளில், கட்டடங்கள் கட்டப்பட்டு வருவது குறித்து, விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் விதிகளை மீறி கட்டடங்கள் கட்டப்படுவதை தவிர்க்க, 1993ம் ஆண்டில் 'மாஸ்டர் பிளான்' சட்டம் கொண்டு வரப்பட்டது. '30 டிகிரிக்கு மேல் உள்ள செங்குத்தான மலைகளின் மீது கட்டடம் கட்டக்கூடாது; 7 மீட்டர் உயரத்துக்கு மேல் கட்டடங்கள் கட்டக்கூடாது' என பல்வேறு விதிமுறைகள் உள்ளன.அதிகரட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட குன்னகொம்பை அருகே, செங்குத்தான மலை மீது, பல ஏக்கர் தேயிலை தோட்டம் அழிக்கப்பட்டு, 10க்கும் மேற்பட்ட சொகுசு பங்களாக்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஊரடங்கு காலத்தை சாதகமாக்கி கொண்டு கட்டட பணி வேகமாக நடந்து வருகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள், முதல்வர் மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் அனுப்பி உள்ளனர்.மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா கூறுகையில்,''இந்த புகார் தொடர்பாக, சம்மந்தப்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, விதிகள் மீறப்பட்டிருந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X