| கொரோனா பரிசோதனை 'ஆன்லைன்' பதிவு Dinamalar
கொரோனா பரிசோதனை 'ஆன்லைன்' பதிவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2020
01:08

குன்னுார்:நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை அதிகரித்து வருவதால், 'ஆன்லைனில்' பதிவு செய்து, முடிவை அறிந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.குன்னுார் அருகே, எல்லநள்ளி ஊசி தொழிற்சாலையில் ஒருவருக்கு ஏற்பட்ட தொற்று காரணமாக, தொற்று எண்ணிக்கை அதிகரித்தது. பலருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, 'பாசிடிவ்' நபர்கள் மட்டும், மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மற்றவர்கள் முடிவு தெரியாமல் குழப்பம் அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த குழப்பத்தை தவிர்க்க, தற்போது சேகரிக்கப்படும் மாதிரிகளின் தகவல் அனைத்தும், 'ஆன்லைன்'ல் பதிவேற்றப்படுகிறது.கூடுதல் கலெக்டர் ரஞ்சித் சிங் கூறுகையில், ''தற்போது எல்லநள்ளி தொழிற்சாலையில் பணியாற்றும் 80 சதவீதம் பேருக்கு மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. அதிகளவில் மாதிரிகள் எடுக்கப்பட்டு வருவதால், இதன் முடிவில் ஏற்படும் கால தாமதத்தை தவிர்க்க, ஆன்லைன் முறை கடைபிடிக்கப்படுகிறது. இந்த தகவல்களை, குறுஞ்செய்தி 'லிங்க்' வைத்து, குறிப்பிட்ட நபர்கள் மட்டும் தெரிந்து கொள்ள முடியும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X