| முதுமலையில் டாக்டர் இல்லை: கால்நடை சிகிச்சையில் தொய்வு Dinamalar
முதுமலையில் டாக்டர் இல்லை: கால்நடை சிகிச்சையில் தொய்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2020
01:09

கூடலுார்:முதுமலையில், இரு ஆண்டாக காலியாக உள்ள கால்நடை டாக்டர் பணியிடத்தை நிரப்பாத காரணத்தால், வன விலங்கு இறப்பு சம்பவங்களின் போது, பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமில், 2018 பிப்., முதல், கால்நடை டாக்டர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால், வளர்ப்பு யானைகளுக்கு சிகிச்சை அளிக்க, கோவையிலிருந்து கால்நடை டாக்டர் வரவேண்டி உள்ளது.ஒவ்வொரு முறையும், வனப்பகுதியில் விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கும், இறந்த வன விலங்குகளை பிரேத பரிசோதனை செய்வதற்கும், அரசு கால்நடை டாக்டரை தேடி அலையும் நிலை உள்ளது. முதுமலை கார்குடி பகுதியில் சமீபத்தில், காட்டு யானை இருந்தது. உடனடியாக பிரேத பரிசோதனை செய்ய முடியவில்லை. இரண்டு நாட்களுக்குப் பின், அதன் உடலை மசினகுடி அரசு கால்நடை டாக்டர் பிரேத பரிசோதனை செய்தார். இதனால், வனத்துறையினர் இறந்த விலங்குளின் உடலுக்கு காவல் காக்கும் சூழ்நிலை தொடர்கிறது.வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், 'முதுமலை பகுதியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, காலியாக உள்ள கால்நடை டாக்டர் பணியிடத்தை உடனே நிரப்ப வேண்டும்' என்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X