| மழை காலத்தில் பூத்த ரோஜாக்கள்: ஊட்டி பூங்காவில் பராமரிப்பு Dinamalar
மழை காலத்தில் பூத்த ரோஜாக்கள்: ஊட்டி பூங்காவில் பராமரிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2020
01:12

ஊட்டி:ஊட்டி ரோஜா பூங்காவில், பருவ மழை காலத்திலும் பூத்துள்ள ரோஜா மலர்கள், ரம்மியமாக காட்சி அளிக்கின்றன.நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள ரோஜா பூங்காவில், 4,000 ரக ரோஜா செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா காரணமாக, கடந்த மே மாதம் நடக்க வேண்டிய, மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி ரத்து செய்யப்பட்டன. மலர் செடிகளை பராமரித்து வளர்த்த, தொழிலாளர்களின், உழைப்பை கவுரவப்படுத்த வேண்டும் என்பதற்காக, மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டன.கொரோனா போராளிகளான, துாய்மைப் பணியாளர்கள், மருத்துவ, சுகாதாரத் துறையினர், போலீசார் மற்றும் குடும்பங்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டது.தற்போது, பருவமழை காலத்திலும், ரோஜா பூங்காவில், பெரும்பாலான மலர்கள் உதிராமல், ரம்மியமாக காட்சி அளிக்கின்றன. இதை ஊழியர்கள் பராமரித்து வருகின்றனர்.உள்ளூர் மக்கள் கூறுகையில், 'ஊட்டி தாவரவியல் பூங்கா மலர்களை பதிவு செய்து, சமூக வலைதளங்கள் வாயிலாக, உலக மக்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டது. ரோஜா பூங்கா மலர்களையும், அதுபோன்று பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X