| சீமைக்கருவேல மரங்களால் சிரமம் புலம்பும் புல்வாய்க்கரை மக்கள் Dinamalar
சீமைக்கருவேல மரங்களால் சிரமம் புலம்பும் புல்வாய்க்கரை மக்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2020
01:20

நரிக்குடி: நரிக்குடி புல்வாய்க்கரையில் விவசாய பணிகளுக்காக செல்லும் விவசாயிகள்

அங்குள்ள கண்மாயில் அடர்ந்து வளர்ந்துள்ள சீமை கருவேலமரங்களை கடந்து செல்ல

வேண்டியிருப்பதால் அச்சத்துடன் செல்ல வேண்டியிருக்கிறது.



இங்குள்ள ஆதிதிராவிடர் காலனியில் குளியல் தொட்டி, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை

வசதிகள் இன்றி சிரமப்படுகின்றனர்.நமச்சிவாயபுரம் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை

நிலவுவதால் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் தொட்டி கட்டி சப்ளை செய்ய வேண்டும்.

உப்பு தண்ணீருடன் தாமிரபரணி தண்ணீரை கலந்துவிடுவதால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. தனியாக சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆங்காங்கே வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களால் விவசாய பணிகள் பாதிக்கின்றன.



மயான ரோடு மோசமான நிலையில் இருப்பதால் அதை சீரமைக்க வேண்டும். காலனி

வீதிகளில் பேவர் பிளாக், சிமென்ட் ரோடு அமைக்காததால் மழை நேரங்களில் சகதியுமாக மாறி மக்கள் நடமாட சிரமப்படுகின்றனர்.துார்ந்து போன கிருதுமால் நதியை சீரமைக்க

வேண்டும்.


வசதிகளே இல்லை



காலனியில் போதிய அடிப்படை வசதி கிடையாது. குளம், குட்டைகளில் தண்ணீர் இல்லாததால் குளிக்க, கழிப்பறை செல்ல முடியாத நிலை உள்ளது. நவீன குளியல் தொட்டி, கழிப்பறை உள்ளிட்டவைகளை செய்து தரவேண்டும். குடிநீர் பற்றாக்குறையை போக்க ஆங்காங்கே ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும்.



சரவணன், தனியார் ஊழியர்



தாமிரபரணி நீருடன் உப்பு நீர்



தாமிரபரணி தண்ணீரை உப்பு தண்ணீருடன் கலந்து சப்ளை செய்வதால் குடிக்க, சமைக்க பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. தனியாக சப்ளை செய்ய முறைப்படுத்த வேண்டும். சாக்கடை வசதி இல்லாததால் கழிவுநீர் ரோட்டில் தேங்குகிறது. கால்நடைகளுக்கும் தண்ணீர் தொட்டி கட்ட வேண்டும்.



தங்கம்மாள், குடும்பத் தலைவி



தேவை நேரடி பஸ்



அனைத்து வீதிகளிலும் பேவர் பிளாக், சிமென்ட் சாலை அமைக்க வேண்டும். புல்வாய்க்கரை யில் இருந்து விருதுநகருக்கு நேரடி பஸ் போக்குவரத்து விட வேண்டும். கண்மாயில் அடர்ந்து உள்ள கருவேல மரங்களை கடந்து செல்ல சிரமமாக உள்ளது. குடிமராமத்து திட்டத்தின் கீழ் அப்புறப்படுத்த வேண்டும்.



சிவபாலன், தனியார் ஊழியர்




தீர்வுக்கு நடவடிக்கை





2011ன் கணக்கெடுப்பின்படி நிதி ஒதுக்கப்படுகிறது. தற்போதுள்ள மக்கள் தொகை கணக்கீடுபடி நிதி ஒதுக்க வேண்டும். அனைத்து பிரச்னைக்கும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.



யுவராணி, ஊராட்சி தலைவர்

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X