திருப்பூரில் பாதிப்பு 198 ஆக உயர்வு: மாநகராட்சி உதவி கமிஷனருக்கு தொற்று
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2020
01:31

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் நேற்று, மாநகராட்சி உதவி கமிஷனர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மொத்த பாதிப்பு 198 ஆக அதிகரித்துள்ளது.திருப்பூர் மாநகராட்சி மண்டல உதவி கமிஷனர் ஒருவர் நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அவருக்கு தொற்று உறுதியானதால், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


இதனால், மண்டல அலுவலகம் முற்றிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, மூடப்பட்டது. அவரது குடும்பத்தார் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படவுள்ளது.உடுமலை திருமண நிகழ்ச்சிக்கு சென்று வந்த, திருப்பூர் அருகே பூமலுாரில் வசிக்கும், நாளிதழ் நிருபர் ஒருவருக்கு, கொரோனா இருப்பது உறுதியானது. இவர், திருப்பூர் அரசு மருத்துவமனையில்:ளார்.


கோவையில் இருந்து திரும்பிய, திருப்பூர் மாநகராட்சியின், ரங்கநாதபுரம் ஜெய்நகரை சேர்ந்த, 66 வயது பெண்; இடுவம்பாளையத்தை சேர்ந்த, 59 வயது பெண் ஆகியோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறுகையில்,,''மாவட்டத்தின் மொத்த பாதிப்பு, 198 ஆக உயர்ந்துள்ளது; இவர்களில், 125 பேர் குணமாகிவிட்டனர். மீதியுள்ள, 72 பேர், கோவை மற்றும் திருப்பூரில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று (நேற்று முன்தினம்) அறிவிக்கப்பட்ட ஒருவர், சேலம் பட்டியலில் சேர்க்கப்பட்டார்,'' என்றார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X