ஊரடங்கால் முடங்கிய வாரச்சந்தைகள்: வருமானமில்லாத வியாபாரிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2020
01:32

எரியோடு:ஊரடங்கினால் சந்தைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வியாபாரிகள் வருமானம் இன்றி தவிக்கின்றனர்.



எரியோட்டில் 300க்கும் மேற்பட்டோர் வாரச்சந்தைகளில் கடை அமைப்பதை தொழிலாக கொண்டுள்ளனர். கடந்த மார்ச் 2௩ முதல் ஊரடங்கால் சந்தைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் எரியோட்டில் வசிக்கும் சந்தை வியாபாரிகள் சிலர் மட்டும் தெருக்களிலும், வீடுகள் முன்பும் கடை அமைத்து வியாபாரம் செய்கின்றனர்.



பலர் இருசக்கர வாகனங்களில் கிராமம் கிராமமாக சென்று பொருட்களை விற்கின்றனர். இவர்களுக்கு வருமானம் என்பது கொரோனாவிற்கு முந்தைய நிலையை ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகவே உள்ளதால் வியாபாரிகள் சிரமத்தில் உள்ளனர்.



தெருக்களில் கடை விரிக்கிறோம்



-வியாபாரி ஆர்.கண்ணன் கூறியதாவது:வடமதுரை, அய்யலுார், வேடசந்துார், பூத்தாம்பட்டி என வாரத்தில் 6 நாட்கள் ஏதாவது ஒரு சந்தைக்கு செல்வோம். ஆனால் தற்போது சந்தைகள் ஏதுமின்றி வீட்டில் பல நாட்கள் வெறுமனே முடங்கி கிடந்தோம். அரசு அறிவித்த சில தளர்வுகளை பயன்படுத்தி ஆங்காங்கே தெருக்களில் கடை விரித்துள்ளோம்.



சொற்ப அளவிலே வருமானம் கிடைக்கிறது.மக்கள், பணம் நடமாட்டமில்லை வியாபாரி வி.கணேசன்மூன்றாம் கட்ட ஊரடங்கு வரை வியாபாரிகள் வீடுகளிலே முடங்க வேண்டியிருந்தது. தற்போதைய தளர்வால் போக்குவரத்து பாதிப்பில்லாத தெருக்களை கண்டறிந்து கடை அமைத்துள்ளோம்.



மக்கள், பணம் நடமாட்டம் குறைவால் வியாபாரம் அதிகமில்லை. முந்தைய வருமானத்தில் கால்பங்கு அளவே கிடைக்கிறது. வீட்டில் முடங்கி இருப்பதற்கு பதில் இதுவாவது கிடைப்பது ஆறுதலாக உள்ளது.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X