செய்திகள் சில வரிகளில்...திண்டுக்கல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2020
01:43

ஆர்ப்பாட்டம்



திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சாத்தான்குளம் போலீசாரால் தாக்கப்பட்டு தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் போன்றவற்றை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



பழநி ரோடு செல்லாண்டியம்மன் கோவில் தெரு முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைச் செயலாளர் பாலசந்திரபோஸ், மாவட்ட தலைவர் விஸ்ணுவர்த்தன் தலைமை தாங்கினர். இருசக்கர வாகனத்தை கையிறால் கட்டி இழுத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



பழநியில் இல்லை சமூக விலகல்



பழநி: ஆன்மிக நகரான இங்கு தள்ளுவண்டி கடைகள், சாலையோர கடைகளில் பொருட்கள் வாங்க வருபவரிடம் சமூக விலகலை பார்க்க முடிவதில்லை. பழநி வட்டாரப் பகுதிகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வசித்தப்பகுதிகள் தனிமைப்படுத்தபட்டு வருகிறது. இருப்பினும் பலர் சமூகஅக்கறை இன்றி, முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் உள்ளனர். சில கடைகளில் கிருமிநாசினி தெளிப்பதில்லை. இதனால் நோய் தொற்று எளிதாக பரவ வாய்ப்பு உள்ளது



.பார் ஆனது மலை ரோடு


பழநி: கொடைக்கானல்செல்லும்ரோட்டின் இருபுறமும் நிழலுடன் உள்ளது. மதுக்கடைகளில் பார் அனுமதியில்லாததால், குடிமகன்கள் இந்த இடங்களை தேர்வு செய்து அமர்கின்றனர். பகலிலேயே மதுஅருந்தி போதையில் திளைக்கின்றனர். தினமும் பலர் இவ்வாறு வருவதால் ரோட்டோரம் காலி பாட்டில்கள், பார்சல்கள், பாலிதீன் குப்பைகள் போன்றவை குவிந்துள்ளது. பிறர் முகம் சுளிக்கும் அளவு நடப்பதால், போலீசார் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.



பீன்ஸ் கிலோ ரூ.10



ஒட்டன்சத்திரம்: இங்குள்ள காந்தி மார்க்கெட்டுக்கு வடகாடு, கண்ணனுார், கோமாளிபட்டி உள்பட மலைப்பகுதி கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட பீன்ஸ் விற்பனைக்கு வருகிறது. கடந்த மாதம் ஒரு கிலோ பீன்ஸ் அதிகபட்சமாக ரூ.35 க்கு விற்றது. தற்போது வரத்து அதிகரிப்பு காரணமாக ரூ.20 க்கு விற்றது. இந்நிலையில் பீன்ஸ் விலை மேலும் சரிவடைந்து கிலோ ரூ.10 க்கு விற்றது. பீன்ஸ் விலை சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.



இறைச்சி கடைகளில் அலைமோதிய கூட்டம்



திண்டுக்கல்: கொரோனா பரவலால் அறிவிக்கப்பட்டுள்ள தற்போதைய ஊரடங்கில்

ஞாயிற்றுகிழமைகளில் எந்தவித தளர்வுகளுமின்றி முழுஊரடங்கு அமல் என அரசு

தெரிவித்துள்ளது. எனவே, இன்று முழு ஊரடங்கு என்பதால் இறைச்சி, மீன் விற்பனை

கடைகள் நேற்றே திறக்கப்பட்டன. அதிகாலை முதலே பொதுமக்கள் மார்கெட், வணிக

வளாகங்களில் அலை மோதினர். பெரும்பாலான இடங்களில் சமூக இடைவெளியை

கடைபிடிக்காததை காண முடிந்தது.



பணம் கொடுத்து பொருள் அதிகாரி விளக்கம்



பழநி: அத்தியாவசிய பொருட்கள் அனைவருக்கும் கிடைக்க ஜூலை 6 முதல் 9 வரை

கார்டுதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்படும். ரேஷன் கடையில் 10ம் தேதி முதல்

பொருட்களை இலவசமாக பெற்று கொள்ளலாம். தற்போது சிலர் ரேஷனில் பொருட்களை பணம் கொடுத்து வாங்கியுள்ளனர். இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியபோது, ''ரேஷன் கடைகளில் பணம் பெற்று பொருள் வழங்கி இருந்தால் அதுபற்றி உயரதிகாரிகளிடம்

கேட்டுள்ளோம். அவர்கள் உத்தரவுப்படி இதற்கு தீர்வு காணப்படும்.'' என்றார்.



அறிவிக்கப்படாத மின்தடை



தாண்டிக்குடி: இம்மலைப்பகுதியில் கொடைக்கானல் துணை மின் நிலையத்தில் இருந்து

சப்ளையளிக்கப்படுகிறது. 50 க்கும் மேற்பட்ட உட்கடை கிராமங்களில் சில தினங்களாக

அறிவிக்கப்படாத மின்தடையும், மின்னழுத்த குறைபாடும் நீடிக்கிறது. மின்வாரியத்தினர் கூறுகையில், ''கொடைக்கானல் சப்ளையில் மழையால் மரங்கள் விழுந்து இடையூறு

ஏற்பட்டுள்ளதால் இப்பிரச்னை ஏற்படுகிறது. மாற்று சப்ளையாக வத்தலக்குண்டில் இருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X