பா.ஜ., கொரோனா சேவை மறு ஆய்வு கூட்டம் புதுச்சேரி நிர்வாகிகள் நேரலையில் பங்கேற்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2020
04:31

புதுச்சேரி : கொரோனோ தொற்று காலத்தில் பா.ஜ., சார்பில் செய்த சேவைகள் குறித்த நேரலை மறு ஆய்வு கூட்டத்தில் புதுச்சேரி நிர்வாகிகள் பங்கேற்றனர்.



கொரோனோ தொற்று காலத்தில் பா.ஜ., சார்பில் செய்த சேவைகள் குறித்த மறு ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. அனைத்து மாநில பா.ஜ., கட்சி அலுவலகங்களில் நேரலையாக நடந்த இக்கூட்டத்தில் பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, பிரதமர் மோடி பங்கேற்றனர்.இக்கூட்டத்தில் பா.ஜ., நிர்வாகிகள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். ராஜஸ்தான், மகாராஷ்டிரா, டில்லி, பீகார் கர்நாடகம், உத்தரபிரதேசம் ஆகிய ஏழு மாநில தலைவர்கள் தங்கள் மாநிலங்களில் கொரோனா தொற்று தடை காலத்தில் மக்களுக்கு இலவசமாக வழங்கிய பொருட்கள், நலத்திட்டங்களை எடுத்துரைத்தனர்.பா.ஜ.,தேசிய தலைவர் நட்டா பேசுகையில், நாடு முழுவதும் பா.ஜ., 5 கோடிக்கு மேல் முககவசங்களை வழங்கியுள்ளது.



13,800 மண்டலங்களில் 8 லட்சம் பா.ஜ.,தொண்டர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். தினமும் லட்சக்கணக்கானோருக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டன என்றார்.பிரதமர் மோடி பேசுகையில், சேவையே நம் செயல் திட்டம். பா.ஜ.,ஆட்சியில் இருந்தாலும் அல்லது எதிர்கட்சியாக இருந்தாலும் மக்களுக்கு தொண்டு செய்வதை தலையாய பணியாக ஏற்று செயல்பட வேண்டும். தொற்று அபாயத்தை கருதாமல் வீடு வீடாக சென்று அத்தியாவசிய பொருட்கள் வழங்கியதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில தலைவர் சாமிநாதன், பொதுச்செயலர்கள் செல்வம், மோகன்குமார், செயலர் அகிலன், ஜெயந்தி, லதா, அணி தலைவர்கள் புகழேந்தி சிவக்குமார், கோவேந்தன் கோபதி, டாக்டர் ஜெயலட்சுமி, மாவட்ட தலைவர்கள் அசோக்பாபு, நாகேஸ்வரன், ஆனந்தன், சிகாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X