| சாலை அமைக்கும் பணி மந்தம் ; சின்னகங்கணாங்குப்பத்தில் அவதி Dinamalar
சாலை அமைக்கும் பணி மந்தம் ; சின்னகங்கணாங்குப்பத்தில் அவதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2020
04:55

கடலுார் : சின்னகங்கணாங்குப்பம் கணபதி நகரில் தார் அமைக்கும் பணி நிறைவு பெறாததால் பொதுமக்கள் ஓட்டுனர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.



கடலுார் அடுத்த சின்னகங்கணாங்குப்பம் கணபதி நகரில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நகரில் தார் சாலை அமைப்பதற்காக ஜல்லி, செம்மண் கொட்டி சமப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், 3 மாதங்கள் ஆகியும் தார் சாலை அமைக்கும் பணி முடியவில்லை.இதனால், ஜல்லிகள் பெயர்ந்து, ஆங்காங்கே சிதறிக் கிடக்கிறது. வாகனங்கள் அடிக்கடி பழுதாகின்றன. மழை பெய்யும் போது, சாலை சேறும் சகதியுமாக காட்சியளிப்பதால் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் கீழே விழுந்து காயமடைகின்றனர். சாலை பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X