| ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு நகராட்சி வேண்டுகோள்  Dinamalar
ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு நகராட்சி வேண்டுகோள் 
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2020
04:56

கடலுார் : கடலுாரில் இன்று ஒரு நாள் முழு ஊரடங்கையொட்டி பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டுமென, நகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டது.



கொரோனா நோய் பரவுவதை கட்டுப்படுத்த 6ம் கட்ட ஊரடங்கு கடந்த 1ம் தேதி முதல் அமலில் உள்ளது. எனினும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று 5ம் தேதி, வரும் 12, 19, 26 ஆகிய ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனையொட்டி கடலுார் மாவட்டத்தில் அனைத்து கடைகளூம் மூடப்பட உள்ளது.கடலுார் நகரில் ஒரு நாள் முழு ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமெனவும் நகராட்சி சார்பில் ஒலிப்பெருக்கி மூலம் நேற்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X