| டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய கூட்டம் Dinamalar
டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய கூட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2020
04:57

கடலுார் : முழு ஊரடங்கையொட்டி இன்று டாஸ்மாக் மூடப்படுவதால், கடலுார் டாஸ்மாக் கடைகளில், மதுவாங்க கூட்டம் அலைமோதியது.



தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையொட்டி, ஊரடங்கு வரும் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.அந்த வகையில் இன்று (5ம் தேதி) டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. இதனால் நேற்று டாஸ்மாக் கடைகளில் குடிமகன்கள் குவிந்து, கூடுதலாக மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.கடலுார் பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் நீண்ட துாரம் வரையில் வரிசையில் காத்திருந்து மதுவாங்கி சென்றனர். முதுநகர், சிப்காட் பகுதி டாஸ்மாக் கடையிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.



போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர்.விருத்தாசலம்விருத்தாசலம் நகரில் நேற்று மாலை 4:00 மணி முதல், பெரும்பாலான கடைகளில் வழக்கத்திற்கு மாறாக கூட்ட நெரிசல் காணப்பட்டது. நகரில் உள்ள 11 டாஸ்மாக் கடைகளிலும் மது பிரியர்கள் முண்டியடித்து, சமூக இடைவெளியை மறந்து மது வகைகளை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.இதற்காக பிரதான சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு முன், தாறுமாறாக வாகனங்களை நிறுத்திச், சென்றதால், இரவு 7:00 முதல், 8:00 மணி வரை போக்குவரத்து கடுமையாக பாதித்தது. அவர்களை கட்டுப்படுத்திய போலீசார், போக்குவரத்து நெரிசலையும் சீரமைத்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X