| கோவில்களில் பிரசாதத்திற்கு தடை: கலெக்டர் உத்தரவு Dinamalar
கோவில்களில் பிரசாதத்திற்கு தடை: கலெக்டர் உத்தரவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2020
04:59

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் கிராமங்களில் உள்ள வழிபாட்டு தலங்களில் அரசு விதிகளை கடைபிடிக்க வேண்டும் என, கலெக்டர் சந்திரசேகர சகாமுரி தெரிவித்தார்.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளது.



தற்போது, கிராமங்களில் சிறிய கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகளில், நெறிமுறைகளை அறிவித்து கடந்த 1ம் தேதி முதல் வழிபாட்டிற்கு அரசு அனுமதி அளித்தது.கடலுார் மாவட்ட வழிபாட்டு தலங்களில் அரசின் வழிபாட்டு நெறிமுறைகளை கடை பிடிப்பது தொடர்பாக, வழிபாட்டு தல பிரநிதிகளுடன் கலெக்டர் சந்திரசேகர சகாமுரி ஆலோசனை நடத்தினார். அப்போது கலெக்டர் கூறியதாவது:கோவிலுக்குள் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், நோய் உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளை அனுமதிக்க கூடாது, சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும், கைகளை சுத்தம் செய்த பிறகே பக்தர்களை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும்.



தெர்மோ ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும்.பிரசாதத்திற்கு தடை:பக்தி பாடல்கள் பாடுவதை தவிர்க்க வேண்டும். பிரசாதங்கள் விநியோகம், புனித நீர் தெளித்தல் கூடாது, வழிபாட்டில் தேங்காய், பழங்கள் மற்றும் பூக்கள் கொண்டு வர அனுமதியில்லை. பக்தர்கள் அமர்ந்து வழிபட கூடாது, சிலை ஊர்வலம் கூடாது போன்ற விதிமுறைகளை கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும் என, கலெக்டர் தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X