| மரவள்ளி செடியில் பூச்சி தாக்குதல் ; கடலூர் மாவட்ட விவசாயிகள் கவலை Dinamalar
மரவள்ளி செடியில் பூச்சி தாக்குதல் ; கடலூர் மாவட்ட விவசாயிகள் கவலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2020
05:38

கடலுார், : கடலுார் மாவட்டத்தில் மரவள்ளியில் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால் மகசூல் குறையும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.



கடலுார் மாவட்டத்தில் மணற்பாங்கான நிலங்களில் மரவள்ளி பயிர் செய்யப்படுகிறது. மாவட்டத்தில் கடலுார், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் பகுதிகளில் அதிகளவு மரவள்ளி பயிர் செய்யப்படுகிறது. மழைக்கு பின்பு நடவு செய்துள்ள மரவள்ளி தற்போது களையெடுக்கும் நிலையில் உள்ளது.அதில் இலை் பூச்சி தாக்குதல் அதிகரித்து, செடி பலமிழந்துள்ளது. இதுவரை மரவள்ளியில் பூச்சி தாக்குதல் அரிதான விஷயமாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு பூச்சி தாக்குதல் அதிகரித்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.



ஒரு சில ஊர்களில் மரவள்ளி செடியை தாக்கும் இலை பூச்சிகளை, 3 முறைக்கு மேல் மருந்து தெளித்து கட்டுப்படுத்தியுள்ளனர். இருப்பினும் மீண்டும் துளிர்விடும்போது இலை பூச்சிகள் வந்து விடுகின்றன.இதனால் மரவள்ளியில் பூச்சி தாக்குதலால் மகசூல் குறையும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.;

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X