| தற்கொலை மிரட்டல் விடுத்தவர் கைது Dinamalar
தற்கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2020
05:41

கடலுார் : காவல் நிலையம் முன், தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.



கடலுார், திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில், பெண் காவலர் புகழ்ச்செல்வி என்பவர் நேற்று காலை பாரா பணியில் இருந்தார். அப்போது, அங்கு வந்த, பண்ருட்டி, நத்தம் பகுதியைச் சேர்ந்த வீரப்பன், 25, என்பவர், குடிபோதையில், காவல் நிலையம் முன்பு, நின்று கொண்டு, 'எனது மனைவி மற்றும் மைத்துனர் என்னை தொந்தரவு செய்கின்றனர். பெட்ரோல் ஊற்றி, தீ வைத்துக் கொண்டு, சாகப்போகிறேன்' என கூறினார். அவரை காவலர் புகழ்ச்செல்வி, தடுத்தபோது, அவரை பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்தார்.இது குறித்து, திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து, வீரப்பனை கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X