வெட்டியாய் ஊர் சுற்ற வேண்டாம்: கமிஷனர் அறிவுரை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2020
21:37

சென்னை: ''சென்னையில், காசிமேடு மீன் மார்க்கெட் உட்பட, மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில், கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது,'' என, போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கூறினார்.சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அமைந்தகரை, அண்ணா ஆர்ச் அருகே, நேற்று ஊரடங்கு பாதுகாப்பு பணிகளை, போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் ஆய்வு செய்தார்.பின், அவர் அளித்த பேட்டி:கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி, மக்களிடம் விழிப்புணர்வு உள்ளது. அவர்கள், போலீசாருக்கு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். எவ்வித தளர்வும் இன்றி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில், மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லை என்பதால், தொற்றை கட்டுக்குள் கொண்டு வர உதவியாக இருந்துள்ளது.தளர்வின்றி ஊரடங்கு எனும் யுத்தியை, வெளிநாடுகளிலும் கடைப்பிடிக்கின்றனர்.ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து, சென்னையில் உள்ள, 12 காவல் மாவட்டங்களிலும், வணிகர்களுடன், துணை கமிஷனர்கள், கூட்டம் நடத்தி, முக கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்து, பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.காசிமேடு, சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட், மாதவரம் மார்க்கெட் உட்பட, மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில், கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த இடங்களில், ஒலிபெருக்கி, பறக்கும் கருவி வாயிலாக விழிப்புணர்வு செய்யப்படுகிறது.மக்கள், தேவையின்றி ஊர் சுற்ற வேண்டாம்; கூட்டம் கூடுவதை தவிர்த்தால், கொரோனாவிடம் இருந்து விடுபடலாம். ஊரடங்கு உத்தரவை மீறும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க, மாநகராட்சி சார்பில் பறக்கும் படை செயல்படுகிறது. அவர்கள், விதிமீறல் கடைகளை, 'சீல்' வைத்து, அபராதம் வசூலிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.போலீசாருக்கு, 'பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்' நபர்களை, ரோந்து பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்பது அவசியம் இல்லை. அவர்கள் போலீஸ் போல செயல்பட அனுமதிப்பதும் இல்லை. பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் நபர்கள் மட்டுமல்ல, தன்னார்வலர்கள், வியாபாரிகள் என, பல்வேறு தரப்பினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர். அவர்களை, சமூக பணிகளுக்கு ஈடுபடுத்தி வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X