கடற்கரையில் மருத்துவ கழிவு? | சென்னை செய்திகள் | Dinamalar
கடற்கரையில் மருத்துவ கழிவு?
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2020
21:52

திருவொற்றியூர்: சென்னை, திருவொற்றியூர், திருச்சினாங்குப்பம் கடற்கரையில், நேற்று காலை, மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட, ஊசி மற்றும் மருத்துவ உபகரணங்களின் கழிவுகள் அதிகளவில் காணப்பட்டன.அலையின் வாட்டத்தால், பெரும்பாலான மருத்துவக் கழிவுகள், கடலுக்குள் சென்றுவிட்டன; சில மருத்துவ கழிவுகள் மட்டும், ஆங்காங்கே கடற்கரையில் தென்பட்டன.கொரோனா பரவி வரும் நிலையில், மருத்துவக் கழிவுகள் கடற்கரையில் கொட்டப்பட்டிருந்ததால், அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடும் அச்சம் அடைந்தனர்.மருத்துவக் கழிவுகளை, சட்டவிரோதமாக கடற்கரையில் கொட்டி சென்றவர்கள் குறித்து, திருவொற்றியூர் சுகாதாரத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X