| வேங்கைவாசல் ஏரிக்குள் சுடுகாடு வந்தது எப்படி? Dinamalar
வேங்கைவாசல் ஏரிக்குள் சுடுகாடு வந்தது எப்படி?
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2020
21:52

தாம்பரம்: 'களமிறங்குவோம்; நமக்கு நாமே' என, நலச்சங்கங்கள் ஏரியை துார் வாரியும், கிராம ஊராட்சியின் தீர்மானம், வேங்கை வாசல் சித்தேரியின் பரப்பளவை, பாதியாக காலி செய்ததால், தண்ணீர் தேக்கும் பரப்பு குறைந்துள்ளதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.சென்னை அடுத்த வேங்கைவாசல் ஊராட்சியில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில், 30 ஏக்கர் பரப்பளவில் சித்தேரி உள்ளது.இந்த ஏரியை நம்பி, 50 ஆண்டுகளுக்கு முன்பு, 150 ஏக்கருக்கு மேல் விவசாயம் நடந்தது.நகரமயமாக்கலால், படிப்படியாக விவசாயம் குறைந்து, 25 ஏக்கரில் மட்டுமே விவசாயம் நடக்கிறது. இந்த ஏரி, 20 ஆண்டுகளுக்கு மேல் துார் வாரப்படாமல் இருந்த நிலையில், 'சித்தேரி புனரமைப்பு குழு' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.அந்த நேரத்தில், 'களமிறங்குவோம்; நமக்கு நாமே' என, நீர்நிலைகளை சீரமைக்க, தன்னார்வலர்கள், நலச்சங்க நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்து, நம் நாளிதழில் அறிவிப்பு வெளியானது.இதன் எதிரொலியாக, புனரமைப்பு குழுவினர், மக்களிடம், 14.48 லட்சம் ரூபாய் நிதி திரட்டினர்.அதை வைத்து, 2019, ஆக., 20ல் துவங்கிய ஏரியை துார் வாரும் பணிகள், ௬௨ நாட்களில் முடிவடைந்தது. பருவமழை துவங்குவதற்கு முன், அக்., ௨௨ம் தேதியே, துார் வாரும் பணி முடிந்ததால், மழைநீர் ஏரியில் நிரம்பியது.தொடர்ந்து, செங்கல்பட்டு கலெக்டர் ஜான் லுாயிஸ் தலைமையில், புனரமைப்புக் குழுவினருக்கு, பாராட்டு விழா நடந்தது.அப்போது, வேங்கை வாசல் பெரிய ஏரி, சித்தேரி ஆகியவற்றில், 3 கோடி ரூபாய் மதிப்பில், சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.அதற்கான பணிகள் சமீபத்தில் துவங்கிய நிலையில், சித்தேரியில் நடைபாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.அப்பகுதியைச் சேர்ந்த, சமூக ஆர்வலர் செந்தில் கூறியதாவது:மொத்தமுள்ள, 30 ஏக்கரில், 23 ஏக்கர் ஏரியும், மீதமுள்ள, 7 ஏக்கரில், போக்கு மற்றும் வரத்து கால்வாய்களும் உள்ளன.இந்த, 23 ஏக்கரில், 4.5 ஏக்கர், சுடுகாடாகவும், 5.5. ஏக்கர் ஆக்கிரமிப்புடன் சேர்ந்த நிலப்பரப்பாகவும் உள்ளது.மீதமுள்ள, 13 ஏக்கரிலேயே தண்ணீர் தேங்கி உள்ளது. ஏரிக்குள் சுடுகாடு அமைய, ஊராட்சி நிர்வாகமே காரணம்.பொதுப்பணித்துறையின் ஏரியில், ஊராட்சியின் தீர்மானத்தால், சுடுகாடு உருவாகி உள்ளது; இதற்காக, வருவாய் துறை, ஊராட்சி நிர்வாகங்களுக்கு, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது.இதுவே, ஏரியின் பரப்பளவு பாதியாக குறைந்து, தண்ணீர் தேக்குவதில், சிக்கலாக உள்ளது. பொதுப்பணித்துறை சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணிகளுடன், ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும்இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X