பைக்கில் போனால் குதிரை பயண 'பீலிங்' கிடைக்கும்! வேறெங்கே... குதறிக்கிடக்கும் கணபதி எப்.சி.ஐ., ரோட்டில்தான்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2020
01:06

ராஜேஸ்வரி நகரில் வெளிச்சமில்லைமாநகராட்சி, 66வது வார்டுக்கு உட்பட்ட, நவஇந்தியா, இந்துஸ்தான் கல்லுாரி அருகில், ராஜேஸ்வரி நகரில் உள்ள, மின் கம்பத்தில்(எண்: 647) கடந்த சில மாதங்களாக, விளக்கு எரிவதில்லை.- தேவதாஸ், ராஜேஸ்வரி நகர்.

நாய் தொல்லை அதிகரிப்புமாநகராட்சி, 42வது வார்டுக்கு உட்பட்ட, சின்னவேடம்பட்டி, அத்திபாளையம் ரோட்டில், தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.- சுதாகர், சின்னவேடம்பட்டி.

குப்பை அள்ளுவதில்லைகணபதி மாநகர், டெக்ஸ்டூல் சுப்ரமணியம் நகரில், குப்பை அள்ளுவதில்லை. சாலையோரம் குவிந்துள்ள குப்பையால், துர்நாற்றம் வீசுகிறது.- முரளி, கணபதி மாநகர்.

சாக்கடை கால்வாய் அடைப்புகவுண்டம்பாளையம், எஸ்.கே.ஆர்.நகர் இரண்டாவது வீதியில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் சாலையில் ஓடுகிறது.- நந்தகுமார், கவுண்டம்பாளையம்.

போக்குவரத்துக்கு இடையூறுதிருச்சி ரோடு, ராமநாதபுரம், ஒலம்பஸ் பஸ் ஸ்டாப் அருகில், சாலையின் பாதியை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள, இரும்பு குழாய்களால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.- கணேஷ், ஒலம்பஸ்.

ராமலிங்க நகரில்விளக்கு எரிவதில்லைசாய்பாபா காலனி, கே.கே.புதுார், ராமலிங்க நகர், நான்காவது குறுக்கு வீதியில் உள்ள, மின் கம்பத்தில்(எண்: 582), விளக்கு எரிவதில்லை.- ரமேஷ்குமார், கே.கே.புதுார்.

விளக்குகள் எரிவதில்லைகுனியமுத்துார் இடையர்பாளையம், அம்மாசி கோனார் வீதியில் உள்ள, இரு மின் கம்பங்களில், கடந்த சில மாதங்களாக, விளக்குகள் எரிவதில்லை. மின்வாரிய அலுவலகத்தில், புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.- ராஜூ, இடையர்பாளையம்.

எப்.சி.ஐ., ரோடு படு மோசம்கணபதி அருகே, எப்.சி.ஐ., ரோடு, குண்டும் குழியுமாக உள்ளது. மழை நேரங்களில், சாலையில் உள்ள குழியில், நீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.- சதீஷ், கணபதி.

மணியகாரம்பாளைத்தில் துர்நாற்றம்கணபதி, மணியகாரம்பாளையம் முதல் வீதியில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கியுள்ளது; துர்நாற்றம் வீசுகிறது.- செல்லம்மாள், மணியகாரம்பாளையம்.

மின் கம்பத்தை மாற்றணும்மாநகராட்சி, 9வது வார்டுக்கு உட்பட்ட, கவுண்டம்பாளையம், சாமுண்டீஸ்வரி நகரில், சாக்கடை கால்வாயை ஒட்டி அமைந்துள்ள, மின் கம்பம், சிதிலமடைந்து விழும் நிலையில் உள்ளது. இக்கம்பத்தை அகற்றி விட்டு, புது கம்பம் அமைக்க வேண்டும்.- ஜெயந்தி, சாமுண்டீஸ்வரி நகர்.

நடூரில் சுகாதார சீர்கேடுமேட்டுப்பாளையம் நடூரில் சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- ரவி, நடூர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X