சென்னையில் பரிசோதனை குறைவு | சென்னை செய்திகள் | Dinamalar
சென்னையில் பரிசோதனை குறைவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2020
23:18

சென்னை,சென்னையில், இரு நாட்களாக, தொற்று கண்டறியும் பரிசோதனை எண்ணிக்கை குறைந்து உள்ளது.பிற மாவட்டங்களை விட, சென்னையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக உள்ளனர். அதிக பரிசோதனை செய்து, தொற்று பரவலை தடுக்க, ஜூன், 19ம் தேதி முதல், ஜூலை, 5ம் தேதி வரை, முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.பொதுமக்கள், வீட்டில் இருந்ததால், வீடு, வீடாக காய்ச்சல் பரிசோதனை நடந்தது.மேலும், வார்டு வாரியாக மருத்துவ முகாம் அமைத்து, அறிகுறி கண்டறியப்பட்டது.இந்த வகையில், தினமும், ஒரு மண்டலத்தில், 300 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 150 முதல், 220 பேருக்கு, தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இந்நிலையில், முழு ஊரடங்கின் கடைசி நாளான, 5ம் தேதி முதல், பரிசோதனை குறைந்துள்ளது. இரு நாட்களாக, 200க்கும் குறைவான நபர்களுக்கு தான் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதிப்பும் குறைந்து வருகிறது.இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: முழு ஊரடங்கில், அனைவரும் வீட்டில் இருந்ததால், அறிகுறிகளை எளிதில் கண்டறிய முடிந்தது. பரிசோதனையும் அதிக எண்ணிக்கையில் நடந்ததால், தொற்று பாதிப்பும் அதிகமாக இருந்தது. ஊரடங்கு தளர்வால், அறிகுறி நபர்களை கண்டறிவதில் சிரமம் உள்ளது. இதனால், பரிசோதனை எண்ணிக்கை குறைந்தது. இருந்தும், காய்ச்சல் பரிசோதனை வழியாக, தொற்று பாதிக்கப்பட்ட வர்களை கண்டறிந்து வருகிறோம். வேலைக்கு செல்பவர்கள், உடல்நிலையில் சிறு மாற்றம் தெரிந்தாலும், மாநகராட்சியை தொடர்பு கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X