| 'ஸ்கிரீனிங் சென்டரில்' கேமரா Dinamalar
'ஸ்கிரீனிங் சென்டரில்' கேமரா
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2020
23:18

கிண்டி, தொற்று பாதிக்கப்பட்டவர்கள் மாயமாவதை தடுக்க, கிண்டி, ஸ்கிரீனிங் சென்டரில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.கிண்டி, தொழிற்பேட்டை வளாகத்தில், 'ஸ்கிரீனிங் சென்டர்' உள்ளது.இங்கு, தொற்று பாதிக்கப்பட்டவர்களில், 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு, ரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை, நாடி துடிப்பு, ஆக்சிஜன் மற்றும் சர்க்கரை அளவு, ரத்த பரிசோதனை, மார்பக எக்ஸ்-ரே ஆகிய, மேல் பரிசோதனை செய்யப்படுகிறது.சில இடங்களில், அச்சம் காரணமாக சிலர் மாயமாவதாக புகார் எழுந்தது. அதுபோன்ற சம்பவங்கள், இங்கு நடைபெறாமல் இருக்க, கிண்டி, ஸ்கிரீனிங் சென்டரை சுற்றி, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X