| வெடிகுண்டு மிரட்டல் மதுரை வாலிபர் கைது Dinamalar
வெடிகுண்டு மிரட்டல் மதுரை வாலிபர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2020
23:23

எழும்பூர், எழும்பூர் ரயில் நிலையத்தில், வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த மதுரை வாலிபரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.எழும்பூர், பாந்தியன் சாலை, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்று முன்தினம் இரவு, 11:45 மணியளவில், மொபைல் போனில் பேசிய மர்ம நபர் ஒருவர், எழும்பூர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், சிறிது நேரத்தில் வெடிக்கும் என்றும் கூறி, இணைப்பை துண்டித்துள்ளார். உடனே, கட்டுப்பாட்டு அறையிலிருந்து, வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள், இரண்டு மணி நேரம் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்தனர். இதில், எந்த வெடிகுண்டும் சிக்காததால், மிரட்டல் வெறும் புரளி என, தெரிய வந்தது.தொடர்ந்து, மிரட்டல் விடுத்த நபரின் எண்ணை வைத்து, விசாரணை மேற்கொண்டதில் அவர், மதுரை, அலங்காநல்லுாரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், 27, என்பது தெரிய வந்தது.தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ராதாகிருஷ்ணன், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X