மிரள வைத்த ஆறு மண்டலங்கள் மீள்வதால் மக்கள் நிம்மதி மூச்சு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2020
23:24

ராயபுரம்,:சென்னை மாநகராட்சியை மிரள வைத்த மண்டலங்கள், தொற்றிலிருந்து, 'மளமள'வென மீண்டு வருவது, மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.சென்னை மாநகராட்சியில், தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, நேற்றுடன், 70 ஆயிரத்து, 17 ஆக உயர்ந்துள்ளது. அதில், 44 ஆயிரத்து, 882 பேர் குணமடைந்தனர். தவிர, 24 ஆயிரத்து, 52 பேர் மட்டுமே, சிகிச்சையில் உள்ளனர்; 1,082 பேர் இறந்துள்ளனர். கொரோனா பாதிப்பு துவங்கியது முதலே, ராயபுரம் மண்டலத்தில், தொற்று பரவல் ருத்ர தாண்டவமாடி வருகிறது. நேற்றுடன் இங்கு, 8,981 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில், 6,826 பேர் குணமடைந்துள்ளனர். இது, 76 சதவீதமாகும். தவிர, 1,999 பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர். இது, 22 சதவீதமாகும். உயிரிழப்பு, 156 ஆக உள்ளது தண்டையார்பேட்டையில், தொற்றால் பாதிக்கப்பட்ட, 7,762 பேர், 5,791 பேர் குணமடைந்துள்ளனர். இது, 75 சதவீதமாகும். 1,810 பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர். உயிரிழப்பு, 161 ஆக உள்ளது தேனாம்பேட்டையில், 7,775 பேரில், 5,166 பேர் குணமடைந்த நிலையில், 2,447 பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர். இது முறையே, 66; 31 என்ற சதவீத அளவில் உள்ளது. உயிரிழப்பு, 162 ஆக உள்ளது அண்ணாநகரில், 7,735 பேரில், 5,258 பேர் குணமடைந்த நிலையில், 2,383 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இது, 68; 31 என்ற சதவீத அளவில் உள்ளது. உயிரிழப்பு, 94 ஆக உள்ளது கோடம்பாக்கத்தில், 7,540 பேரில், 4,448 பேர் குணமடைந்த நிலையில், 2,990 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது, சதவீத அளவில், 59; 40 ஆக உள்ளது; இங்கு, 102 பேர் இறந்துள்ளனர் திரு.வி.க.நகரில், 5,693 பேரில், 3,682 பேர் குணமடைந்தனர்; 1,898 பேர் சிகிச்சை பெறும் நிலையில், சதவீதம், 65; 33 என்ற அளவில் உள்ளது. உயிரிழப்பு, 113 ஆக உள்ளது.சென்னை மாநகராட்சியை மிரள வைத்த, இந்த ஆறு மண்டலங்களிலும், தொற்று பாதிக்கப்பட்டவர்களில், 76 - 59 சதவீதம் பேர் குணமடைந்துள்ளதால், விரைவில் தொற்று பரவல் அகலும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X