| அவதுாறு பேச்சு: நடிகை வனிதா புகார் Dinamalar
அவதுாறு பேச்சு: நடிகை வனிதா புகார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2020
23:25

போரூர் :சமூக வலைதளத்தில், தன்னை அவதுாறாக பேசிய பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நடிகை வனிதா விஜயகுமார், போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா, சந்திரலேகா படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடித்து, தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இவர், தற்போது, போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு, போரூர் காவல் நிலையத்தில், வனிதா புகார் மனு ஒன்று அளித்தார்.அதில், 'சமூக வலைதளத்தில், சூர்யாதேவி என்ற பெண், தன்னை அவதுாறாக பேசியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.போரூர் போலீசார் விசாரிக்கின்றனர். கடந்த மாதம் வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்.பீட்டர் பாலின் முதல் மனைவி, தனக்கு தெரியாமல் திருமணம் செய்ததாக, அவர் மீது, வடபழநி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X