| பாரதிய ஜனசங்க நிறுவனர் பிறந்த நாள் விழா Dinamalar
பாரதிய ஜனசங்க நிறுவனர் பிறந்த நாள் விழா
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2020
05:24

கடலுார்; கடலுார் கிழக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 119வது பிறந்த நாள் விழா நடுவீரப்பட்டு மற்றும் சி.என்.பாளையத்தில் நடந்தது. கிழக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். சியாமா பிரசாத் முகர்ஜி திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டு, 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. கிழக்கு மாவட்ட பார்வையாளர் விநாயகம் பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் மாவட்ட செயலர்கள் பெருமாள், சிவா, முன்னாள் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் ஜெனித் மேகநாதன் பங்கேற்றனர். விழாவில், மணிபாலன், ஜலபதி, சிவகணேஷ், திருகுமார், முத்துக்குமரன், சிவக்குமார், நாராயணன், கார்த்திகேயன், கார்த்திகா, தேவராஜ், சுந்தர்ராஜன், திருமுருகன், சங்கர், பாலாஜி, சி.என்.பாளையம் கிளைத் தலைவர் சரஸ்வதி பங்கேற்றனர். ஏற்பாடுகளை நடுவீரப்பட்டு கிளைத் தலைவர் வெங்கடேசன், பரதன் செய்திருந்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X