மழை நீர் சேகரிப்பு மையமானது மூவரசம்பட்டு கோவில் குளம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2020
00:25

மடிப்பாக்கம் மூவரசம்பட்டு ஊராட்சியின் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கும், கங்கையம்மன் கோவில் குளம், 'நமக்கு நாமே' திட்டத்தின் முயற்சியால், மழை நீரை சேமிக்க தயார் நிலையில் உள்ளது.சென்னை, மடிப்பாக்கம் அடுத்த மூவரசம்பட்டு ஊராட்சியில், 2 ஏக்கர் பரப்பளவில், கங்கையம்மன் கோவில் குளம் அமைந்துள்ளது.சுற்றுவட்டார பகுதிகளின் நிலத்தடி நீராதாரமாக விளங்கிய இந்த குளம், பல ஆண்டுகளாக துார் வாரப்படாததால் துார்ந்தது.குளத்தை துார் வாரி சீரமைக்க வேண்டும் என, ஊர் மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால், 2011 - -16 வரை, குளத்தை துார் வாரி, கரையை பலப்படுத்தியதாக, 34.36 லட்சம் ரூபாய் கணக்கு காட்டப்பட்டது.அதன் பிறகும், குளத்தில் ஆகாய தாமரை வளர்ந்து, குப்பை, புதர் மண்டி சீரழிந்து காட்சியளித்தது.சீரமைக்காத குளத்திற்கு கணக்கு காட்டியதால், நலச்சங்கத்தினர் போர்க்கொடி துாக்கினர். இதையடுத்து, மாவட்ட கலெக்டர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.இந்நிலையில், கடந்த ஆண்டு ஏற்பட்ட கடும் தண்ணீர் பஞ்சத்தால், சென்னை, புறநகர் மக்கள் தவியாய் தவித்தனர். இதையடுத்து, நம் நாளிதழ் சார்பில், அரசை எதிர்பாராமல், நீர்நிலைகளை துார் வார, தன்னார்வலர்கள், நலச்சங்கத்தினருக்கு அழைப்பு விடுத்து, 'நமக்கு நாமே' எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.இதன் எதிரொலியாக, மூவரசம்பட்டு பகுதியைச் சேர்ந்த பல்வேறு நலச்சங்கத்தினர், ஊர் பொதுமக்கள், தன்னார்வலர்கள் இணைந்து குளத்தை புனரமைத்தனர்.அதன் பலனாக, தற்போது மழைநீர் சேகரிக்கும் வகையில், மூவரசம்பட்டு குளம் தயார் நிலையில் உள்ளது.இருப்பினும், இந்த குளத்திற்கு, மூவரசம்பட்டு ஏரியில் இருந்து உபரி நீர் வரும் வரத்துக் கால்வாய், ஆதம்பாக்கம் ஏரிக்கு செல்லும் போக்கு கால்வாய் ஆகியவை சீரமைக்கப்படாமல் உள்ளது.இதையும் சீரமைத்து, குளத்தை, முழுமையான மழை நீர் சேகரிப்பு மையமாக மாற்ற வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X