ஆசை காட்டி மோசம் செய்த ஐ.டி., நிறுவனங்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

09 ஜூலை
2020
08:30
பதிவு செய்த நாள்
ஜூலை 09,2020 00:26

சென்னை :கூடுதல் சம்பள ஆசை காட்டி, நேர்முக தேர்வு நடத்தி, வேலைக்கு தேர்வு செய்த சில ஐ.டி., நிறுவனங்கள், தற்போது வழங்கிய பணி ஆணையை ரத்து செய்ததால், பார்த்த வேலையை தொலைத்து விட்டு, அப்பாவி இளைஞர்கள் நிர்கதியாக நிற்கின்றனர்.



நன்கு படித்த இளைஞர்களுக்கு, எளிதாக வேலை கிடைக்கும் இடமாக, ஐ.டி., நிறுவனங்கள் உள்ளன. அந்த வகையில், சென்னை, ஓ.எம்.ஆரில், தரமணி முதல் சிறுசேரி வரை, நுாற்றுக்கணக்கான, ஐ.டி., நிறுவனங்கள் செயல்படுகின்றன.



ஊதியம்



கொரோனா ஊரடங்கால், ஐ.டி., நிறுவனங்கள் பணி வெகுவாக பாதித்துள்ளது. பல நிறுவனங்கள், வீட்டில் இருந்து பணி செய்ய, ஊழியர்களை அறிவுறுத்தி உள்ளன. போதிய பணி இல்லாததால், சில நிறுவனங்களில், ஆள்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இது ஒருபுறமிருக்க, பல ஐ.டி., நிறுவனங்கள், ஊரடங்கு அறிவிப்புக்கு முன், கூடுதல் சம்பள ஆசை காட்டி, நன்கு அனுபவம் வாய்ந்த ஆட்களை, நேர்முக தேர்வு வாயிலாக தேர்ந்தெடுத்தது.அதேபோல், கல்லுாரிகள் வழியாகவும், புதிதாக இளைஞர்களை தேர்வு செய்தது. பணி அனுபவத்தை பொறுத்து, ஊதியம் நிர்ணயம் செய்து, அவர்களுக்கு பணி ஆணையும் வழங்கப்பட்டது.



அறிக்கை




இதை நம்பி, ஏற்கனவே பார்த்த வேலையை விட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள், புதிய நிறுவனங்களுக்கு செல்ல காத்திருக்கின்றனர். ஊரடங்கு அறிவித்த நிலையில், பல நிறுவனங்கள், பணி ஆணையை சில மாதங்கள் நீட்டித்துள்ளன.அதிலும் சில நிறுவனங்கள், 'எக்காரணம் கொண்டும், பணி ஆணையை ரத்து செய்யமாட்டோம்; ஊரடங்கு முடிந்தபின், தேர்வு செய்த நபர்களை பணிக்கு அமர்த்துவோம்' என, அறிக்கை யும் விட்டன.



கோரிக்கை



இந்நிலையில், சில குறிப்பிட்ட மென்பொருள் நிறுவனங்கள், எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், பணி ஆணையை ரத்து செய்து, தேர்வு செய்த நபர்களுக்கு, 'இ - மெயில்' வாயிலாக தகவல் அனுப்பி உள்ளது.இதனால், ஏற்கனவே பார்த்த வேலையை விட்டு, ஊரடங்கால் மூன்று மாதமாக சம்பளம் இல்லாமல் வீட்டில் முடங்கியதுடன், புதிய வேலையும் இல்லாமல், அப்பாவி இளைஞர்கள், நிர்கதியாக நிற்கின்றனர். பணி ஆணை வழங்கியவர்களுக்கு, ஊரடங்கு முடிந்தபின் வேலை வழங்குவதுடன், ரத்து செய்த பணி ஆணையை வாபஸ் பெற, மென்பொருள் நிறுவனங்களுக்கு, தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என, இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatan - Puducherry,இந்தியா
09-ஜூலை-202013:05:05 IST Report Abuse
venkatan இந்த ஐ. டீ நிறுவனங்கள் பிரத்தியேக தொழில் சட்டங்கள் இயற்றி அவற்றின் மூலம் அரசு அமலாக்க வேண்டும்.வேலை ப்பாதுகாப்பு, பணிநிலைமைகள், ஊதியம்,விடுமுறை, சம்பளம், நேரம்,பதவி உயர்வு,ஒழுக்கம் போன்றவற்றையும் நெறிமுறை செய்ய வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X