| தங்குமிடத்துடன் இலவச கல்வி Dinamalar
தங்குமிடத்துடன் இலவச கல்வி
Advertisement
 

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2020
00:31

சென்னை, 'ஏழை மாணவர்களுக்கு, தங்குமிடம், உணவு ஆகியவற்றுடன் கூடிய இலவச கல்வி வழங்கப்படுகிறது' என, ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்ல செயலர், சுவாமி சத்யஞானானந்தர் தெரிவித்துள்ளார்.விண்ணப்பம்சென்னை, மயிலாப்பூர், ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்ல செயலர், சுவாமி சத்யஞானானந்தர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கடந்த, 115 ஆண்டுகளாக, கல்வி சேவையில் உள்ள எங்கள் மாணவர் இல்லத்தில், தாய், தந்தை இருவரில், யாரேனும் ஒருவரையோ அல்லது இருவரையும் இழந்த, ஆதரவற்ற ஏழை மாணவர்களுக்கு, உணவு மற்றும் தங்குமிடத்துடன் கூடிய, இலவச கல்வி அளிக்கப்படுகிறது.ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், ஆறாம் வகுப்பிலும்; 10ம் வகுப்பு தேறியவர்கள், பாலிடெக்னிக் முதலாம் ஆண்டிலும்; பிளஸ் 2 தேறியவர்கள், பாலிடெக்னிக் இரண்டாம் ஆண்டிலும் சேர, தகுதியான மாணவர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வேலைபாலிடெக்னிக் கல்லுாரியில், ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் மற்றும் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் பிரிவுகள் உள்ளன; படித்து முடித்த மாணவர்களுக்கு, தகுந்த வேலை வாய்ப்பு பெற்று தரப்படும்.இணையதள முகவரி, (URL)http://sites.google.com/view/rkmshome-admissions-2020 வாயிலாக, விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, செயலர், ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம், எண்: 66, பி.எஸ்.சிவசாமி சாலை, மயிலாப்பூர், சென்னை- - 600 004 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் அல்லது நேரடியாகவும் பெற்றுக் கொள்ளலாம்.கூடுதல் விபரங்களுக்கு, 044 - -24990264, 044 - -2499 2537 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் மற்றும் www.rkmshome.org என்ற இணையதள முகவரியிலும் காணலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X