கடையடைப்புக்கு தயாராகும் வியாபாரிகள் சென்னையில் காய்கறி, பழம் கிடைக்குமா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2020
00:31

சென்னை :மாதவரம் மற்றும் திருமழிசை தற்காலிக மார்க்கெட் வியாபாரிகள், கடை அடைப்பு போராட்டத்திற்கு தயாராகி வருவதால், காய்கறிகள், பழங்கள் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.கொரோனா பாதிப்பை தொடர்ந்து, கோயம்பேடு மார்க்கெட், 'சீல்' வைக்கப்பட்டு, 70 நாட்களுக்கு மேல் ஆகிறது.மாற்று ஏற்பாடாக, திருமழிசையில் தற்காலிக காய்கறி மார்க்கெட்டும், மாதவரம் புறநகர் பஸ் நிலையத்தில், பழ மார்க்கெட்டும் திறக்கப்பட்டுஉள்ளன.கடும் அவதிகோயம்பேடில் இருந்த, 2,400 காய்கறி மொத்த வியாபாரிகளில், 200 பேருக்கும்; 836 பழ வியாபாரிகளில், 200 பேருக்கும் மட்டுமே, இங்கு கடைகள் ஒதுக்கப்பட்டன. இதனால், பல மொத்த வியாபாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.சிறு மொத்த வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்காததால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழையால், திருமழிசை மற்றும் மாதவரம் மார்க்கெட்டில், வியாபாரிகள், கடும் அவதிக்கு ஆளாகினர்.ஆனால், தங்களின் கோரிக்கையை, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் பரிசீலிக்காதது, வியாபாரிகள் மத்தியில், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, 10ம் தேதி இரவு முதல், மாதவரம் மற்றும் திருமழிசையில், காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனையை நிறுத்த, வியாபாரிகள் முடிவெடுத்துள்ளனர். உண்ணாவிரத போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். நடவடிக்கை அவசியம்சிறு மொத்த வியாபாரிகளும், இந்த போராட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். இது தொடர்பான முக்கிய ஆலோசனை கூட்டம், கோயம்பேடில் இன்று நடக்கவுள்ளது.கடைகள் மூடப்படும் பட்சத்தில், காய்கறிகள், பழங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு, அவற்றின் விலை உயரும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே, இவற்றின் விலை அதிகம் இருப்பதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, திருமழிசை மற்றும் மாதவரம் மார்க்கெட் வியாபாரிகளின் பிரச்னைக்கு தீர்வு காண, அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X