வாழ்வாதாரம் பாதித்த மக்களிடம் அபராதம் வசூல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2020
00:55

கடலுார் : மக்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ள நிலையில், கடலுார் மாவட்டத்தில் வாகன சோதனை என்ற பெயரில் போலீசாரின் 'அடாவடி' அபராத வசூல் நடவடிக்கை, பொது மக்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.



கடலுார் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதை போலீசார், தங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பமாக எடுத்துக் கொண்டு பில் போடும் இயந்திரத்துடன் மாவட்டம் முழுதும் களமிறங்கி, கெடுபிடி வசூலில் இறங்கியுள்ளனர்.மஞ்சக்குப்பம் ரவுண்டானா, பீச் ரோடு சந்திப்பு, செம்மண்டலம், திருப்பாதிரிப்புலியூர் அண்ணா பாலம் சிக்னல் உள்ளிட்ட பல இடங்களில், போலீசார் எலக்டரானிக் மிஷன் சகிதமாக கூட்டமாக நிற்கின்றனர்.



இருசக்கர வாகனங்களில் வருபவர்களை நிறுத்தி ரூ.௧௦௦ அபராதம் வசூலிக்கின்றனர். முகக்கவசம் அணிந்து வந்தாலும், வாகன ஆவணங்களை கேட்டு அபராதம் போடும் 'அடாவடி' செயலிலும் ஈடுபடுகின்றனர். கிராம பகுதிகளில் முகக்கவசம் குறித்து விழிப்புணர்வு இல்லாமல் வரும் அப்பாவிகள் பலரும் மனைவி குழந்தைகளுடன் போலீசாரிடம் சிக்கி, கெஞ்சாத குறையாக நிற்கின்றனர். கையில் காசு இல்லை என்றாலும் கவலைப்படாமல் ரசீதை கிழித்து கொடுத்து விடுகின்றனர்.முகக்கவசம் அணியாதவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். அவர்கள் முகக்கவசம் அணிய ஏற்பாடு செய்யுங்கள். லத்தியை சுழற்ற வேண்டாம்.



பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள். என, காவல்துறை உயர் அதிகாரிகள் போலீசாருக்கு தொடர்ந்து அறிவுரை வழங்கி வருகின்றனர். ஆனால், கடலுார் மாவட்ட போலீசார், இலக்கு நிர்ணயித்து அபராதம் வசூல் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். ஊரடங்கால் மூன்று மாதங்களாக மக்கள் வீட்டில் முடங்கியுள்ளனர். இதனால் வாழ்வாதாரம் பெரிதும் பாதித்து பல குடும்பங்கள் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் பட்டினி கிடக்கின்றன. இந்த நேரத்தில் போலீசாரின் அபராதம் வசூல் பொதுமக்களுக்கு பெரிதும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.



முக கவசம் அணியாவிட்டால் நீங்கள் மட்டுமல்ல, உங்கள் குடும்பத்தாரும் பாதிக்கப்படுவர். உங்களுக்காக இல்லாவிட்டாலும் உங்கள் உறவுகளுக்காக முக கவசம் அணியுங்கள் என்று அறிவுரை கூறினால் நிச்சயம் மக்கள் மனதில் மாற்றம் வரும் என்பதில் சந்தேகம் இல்லை. முடிந்தால் போலீசாரே முக கவசம் வழங்கி அறிவுரை கூறலாம்.இதே பிரச்னை பக்கத்து மாநிலமான புதுச்சேரியில் ஏற்பட்டது. முதல்வர் நாராயணசாமி கவனத்திற்கு சென்றது. அபராதம் என்ற பெயரில் மக்களிடம் கசப்புணர்வை ஏற்படுத்தும் வேலையை காவல்துறை நிறுத்த வேண்டும்.



வாழ்வாதாரம் பாதித்துள்ள நிலையில், மக்களுக்கு தொல்லை தருவதை நிறுத்த வேண்டும் என எச்சரித்தார் எனவே, கடலுார் மாவட்டத்திலும் போலீசாரின் அபராதம் வசூல் நடவடிக்கையை நிறுத்தி வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X