கடலுாரில் நேற்று 6 டாக்டர்கள் உட்பட 71 பேருக்கு 'கொரோனா'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2020
01:00

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 6 டாக்டர்கள் உட்பட 71பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,500ஐ நெருங்குகிறது.



கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1,379 பேர் கொரோனா தொற்றால் பாதித்தனர். நேற்று71பேருக்கு தொற்று உறுதியாகி, எண்ணிக்கை 1,450 ஆக உயர்ந்துள்ளது.அதன்படி, சென்னையில் இருந்து கடலுார், விருத்தாசலம், பரங்கிப்பேட்டை, நெய்வேலி, அண்ணாகிராமம், மற்றும் மங்களூர் பகுதியைச் சேர்ந்த 10 பேருக்கு நேற்று தொற்று உறுதியானது. கடலுார், சிதம்பரம், கம்மாபுரம், கிருஷ்ணாபுரம், பண்ருட்டி என ஐந்து கர்ப்பிணி பெண்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளது.



பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், தனிமைப்படுத்தப் பட்டவர்கள் என கடலுார் 15, சிதம்பரம் 3, பரங்கிப்பேட்டை 1, காட்டுமன்னார்கோவில் 3, பண்ருட்டி 2, விருத்தாசலம் 3, கம்மாபுரம் 2, அண்ணாகிராமம் 6, மங்களூர் 6 என 41 பேருக்கு தொற்று உறுதியானது. 6 டாக்டர்கள் சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவமனை டாக்டர்கள் 3 பேர் உட்பட 6 டாக்டர்கள், செவிலியர்கள் 6, மருத்துவமனை ஊழியர் 1 மற்றும்108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் 2 என 15 பேருக்கு தொற்று உறுதியானது.41 பேர் 'டிஸ்சார்ஜ்'நேற்று மேலும் 41 பேர் குணமானதால், இதுவரை 971 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.



தொற்றுபாதித்த 426 பேர் சிதம்பரம், கடலுார், விழுப்புரம், திருச்சி, சேலம், சென்னை, கோயம்புத்துார், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 29,542 பேருக்கு பரிசோதனை செய்ததில்,26,927 பேருக்கு தொற்று இல்லை. 1,165 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. 340 பேர் கண்காணிப்பில் உள்ளனர். மாவட்டத்தில் 78பாதுகாக்கப்பட்ட மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.மேலும் ஒரு பலிமாவட்டத்தில் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு 10 பேர் இறந்துள்ளனர்.



வி.சாத்தமங்கலத்தை சேர்ந்த 61 வயது விவசாயி கிட்னி பாதித்து கடலுார் அரசு மருத்துவ மனையில் சேர்த்து, நேற்று காலை இறந்தார். அவருக்கு கொரோனா தொற்றும் உறுதியானதால் இறந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X